Asianet News TamilAsianet News Tamil

டிம் பெய்னுக்கு அவுட் கொடுக்காத தேர்டு அம்பயர்..! நியாயத்தின் பக்கம் நின்ற ஆஸி., முன்னாள் வீரர்கள்..! வீடியோ

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 2வது டெஸ்ட்டில் ஆஸி., கேப்டன் டிம் பெய்னுக்கு தேர்டு அம்பயர் அவுட் கொடுக்காததை கண்டு முன்னாள் வீரர்கள் பலரும் ரசிகர்களும் பெரும் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்தனர்.
 

third umpire denied to give out to tim paine run out in australia vs india second test video
Author
Melbourne VIC, First Published Dec 26, 2020, 4:44 PM IST

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் வெறும் 195 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் அடித்துள்ளது.

third umpire denied to give out to tim paine run out in australia vs india second test video

முதல் இன்னிங்ஸில் ஆஸி., கேப்டன் டிம் பெய்ன் 13 ரன்கள் அடித்து அஷ்வினின் சுழலில் வீழ்ந்தார். ஆனால் அவர் ஆறு ரன்கள் அடித்திருந்தபோதே அவுட்டாகியிருக்க வேண்டியவர். இன்னிங்ஸின் 55வது ஓவரை அஷ்வின் வீசினார். அந்த ஓவரில், க்றிஸ் க்ரீன் ஒரு பந்தை மிட் ஆஃப் திசையில் அடித்துவிட்டு ஒரு ரன் ஓடினார். ஆரம்பத்தில் அந்த ரன்னை மறுத்த கேப்டன் டிம் பெய்ன், பின்னர் ஓடினார். ஃபீல்டர் பந்தை பிடித்து விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டிடம் வேகமாக த்ரோ அடிக்க, பந்தை பிடித்து ரன் அவுட் செய்தார் ரிஷப் பண்ட்.

மிகவும் க்ளோசான ரன் அவுட்டான இதில், முடிவெடுக்க தேர்டு அம்பயர் நீண்ட நேரம் எடுத்துக்கொண்டார். ரிஷப் பண்ட் பந்தை பிடித்து ஸ்டம்ப்பில் அடித்தபோது, டிம் பெய்ன் பேட் க்ரீஸுக்குள் நுழையவில்லை. ஆனால் க்ரீஸ் கோட்டில் பட்டிருந்தது. ஆனால் பேட்டிங் எந்த பகுதியில் க்ரீஸுக்குள் செல்லவில்லை. ஆனாலும் தேர்டு அம்பயர் மிகவும் க்ளோசான அதற்கு, நாட் அவுட் கொடுத்தார். இந்த விவகாரத்தில் இந்தியர்களும், ஆஸ்திரேலியர்களும் தங்களது வசதிக்கும் தேவைக்கும் ஏற்ப, வெவ்வேறு கோணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து, டுவிட்டரில் இந்த ரன் அவுட் குறித்து விவாதித்துவருகின்றனர்.

third umpire denied to give out to tim paine run out in australia vs india second test video

ஆனால் ஆஸி., அணியின் முன்னாள் வீரர்களான ஷேன் வார்ன், பிராட் ஹாக் ஆகியோர், டிம் பெய்ன் அவுட் தான். தேர்டு அம்பயர் தவறுதலாக கொடுத்துவிட்டார். இந்திய அணியின் துரதிர்ஷ்டம் அது என்று டுவீட் செய்தனர். ஆனாலும் அந்த சம்பவம் நடந்த ஒருசில ஓவர்களிலேயே வெறும் 13 ரன்களுக்கு டிம் பெய்ன் அஷ்வின் பந்தில் ஆட்டமிழந்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios