மும்பை செல்லும் சென்னை அணி – தமிழ் புத்தாண்டு தினத்தில் MI vs CSK பலப்பரீட்சை!
மும்பை அணியுடன் மோதுவதற்காக மும்பை செல்வதற்கு சென்னை விமான நிலையம் வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீடியோ வைரலாகி வருகிறது.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் கடந்த திங்கட்கிழமை கே கே ஆர் அணியுடன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. இதனை அடுத்து, அடுத்த போட்டியானது மும்பையுடன் வான்கேடே மைதானத்தில் வரும் 14ஆம் தேதி இரவு 7:30 மணி அளவில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை செல்வதற்கு சென்னை விமான நிலையம் வந்தது. ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னை விமான நிலையம் வந்தபோது சென்னை விமான நிலையத்தில் இருந்த ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனை அடுத்து சென்னை விமான நிலையத்தில் அணி வீரர்களுடன் வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி அவர்களை கண்டவுடன் ரசிகர்கள் ஆரவாரத்தில் கூச்சலிட்டதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து விமான நிலையத்தில் இருந்து மும்பை செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு உள்ளே புறப்பட்டு சென்றதும் குறிப்பிடத்தக்கது.