எல்லா மேட்சும் இந்தியாவுல தான் நடக்கும்... இது துபாய் பிரீமியர் லீக் அல்ல... : அருண் துமால் உறுதி
“ஐபிஎல் தொடர் முழுவதும் இந்தியாவில்தான் நடைபெறும். இது இந்தியன் பிரீமியர் லீக். துபாய் பிரீமியர் லீக் அல்ல. நாங்கள் இப்போது முழு அட்டவணையையும் உருவாக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறோம். போட்டிகள் முழுதும் இந்தியாவிலேயே நடைபெறும்" என அருண் துமால் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் பாகம் மட்டும் இல்லாமல் முழு ஐபிஎல் போட்டியும் இந்தியாவிலேயே நடைபெறும், என்பது உறுதியாகியுள்ளது. பொதுத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டதால், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி இந்தியாவுக்கு வெளியே நடக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
இதை ஐபிஎல் தலைவர் அருண் துமால் ஏசியாநெட் நியூஸிடம் அளித்த பேட்டியில் உறுதி செய்துள்ளார். ஐபிஎல் நிர்வாகக் குழு விரைவில் தொடரின் இரண்டாவது பகுதியின் அட்டவணையை உருவாக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
“ஐபிஎல் தொடர் முழுவதும் இந்தியாவில்தான் நடைபெறும். இது இந்தியன் பிரீமியர் லீக். துபாய் பிரீமியர் லீக் அல்ல. நாங்கள் இப்போது முழு அட்டவணையையும் உருவாக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறோம். போட்டிகள் முழுதும் இந்தியாவிலேயே நடைபெறும்" என அருண் துமால் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
IPL 2024: ஐக்கிய அரபு நாட்டில் ஐபிஎல் இல்லை – மறுப்பு தெரிவித்த ஜெய் ஷா!
ஐபிஎல் போட்டியின் முதல் பாதியில் அட்டவணை அறிவிக்கப்பட்ட பிறகு, இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெறுவதால் ஐபிஎல் இரண்டாம் பாதி துபாய்க்கு மாற்றப்படும் என்று ஊகங்கள் பரவி வருகின்றன. அவற்றை துமால் முற்றிலும் நிராகரித்துள்ளார்.
இந்தியாவில் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இரண்டு கட்டங்களாகப் நடத்தப்பட உள்ளது. முதல் கட்டத்தில் 21 போட்டிகள் மார்ச் 22 முதல் ஏப்ரல் 7 வரை நடைபெற உள்ளன. இதற்கான போட்டி அட்டவணையை கடந்த மாதம் பிசிசிஐ வெளியிட்டிருந்தது.
சீசனின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே - ஆர்சிபி இடையே நடக்கிறது. முதல் கட்டத்தின் கடைசி போட்டி ஏப்ரல் 7ஆம் தேதி லக்னோவில் நடக்கும் .அதில், லக்னோ - குஜராத் அணிகள் விளையாடும்.
LIC Wage Hike: எல்ஐசி ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்! 17% சம்பள உயர்வு அறிவித்த மத்திய அரசு