இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், 2ஆம் நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா இடையிலான பாக்‌ஷிங் டே டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடந்து வருகிறது. இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவே கனமழை பெய்திருக்கிறது. இதன் காரணமாக மைதானத்தில் அதிகப்படியான ஈரப்பதம் இருந்த நிலையில், டாஸ் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து அரைமணிநேரம் தாமதமாக டாஸ் போடப்பட்டது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா மைதானம் குறித்து நன்கு அறிந்த நிலையில் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. எனினும், கேஎல் ராகுல் நிலையாக நின்று டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 14ஆவது அரைசதத்தை கடந்து விளையாடினார். முதல் நாளில் 59 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், போதிய வெளிச்சமின்மை மற்றும் லேசான மழையின் காரணமாக போட்டியானது முன்கூட்டியே நிறுத்தப்பட்டது.

SA vs IND 1st Test Cricket: ரவீந்திர ஜடேஜாவால் அஸ்வினுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு – பேட்டிங்கில் சொதப்பல்!

இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணியானது 8 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பிறகு நேற்று இரவு முழுவதும் போட்டி நடக்கும் செஞ்சூரியன் மைதானத்தில் கனமழை பெய்துள்ளது. இதன் காரணமாக இன்று நடக்கும் போட்டியானது தாமதமாக தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி 2ஆம் நாள் போட்டியும் மழையால் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. பகல் நேரங்களில் 84 சதவீதம் மழை பெய்யக் கூடும் என்றும், காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையில் மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rinku Singh: ஆர்வத்திற்கு அளவில்லாமல் போச்சு – அணியில் இல்லாத போதும் டெஸ்ட் போட்டியை கண்டு ரசித்த ரிங்கு சிங்!