Asianet News TamilAsianet News Tamil

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரா பேட்டிங்கை தேர்வு செய்தது ஏன்..? நச்சுனு நாலே வார்த்தையில் காரணம் சொன்ன கேப்டன் கோலி

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் 3 டி20, முதல் ஒருநாள் போட்டி என அனைத்திலுமே டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி, இந்த போட்டியிலும் டாஸ் வென்றார்.
 

team indias skipper kohlis reason to select batting first against west indies in second odi
Author
West Indies, First Published Aug 11, 2019, 7:58 PM IST

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெய்னில் நடந்துவருகிறது.

முதல் போட்டி மழையால் ரத்தானதால், தொடரை வெல்ல வேண்டுமானால் எஞ்சிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் களமிறங்கியுள்ளன. 

இந்த போட்டியில் இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முதல் போட்டியில் களமிறங்கிய அதே வீரர்களுடன் தான் இந்திய அணி களமிறங்கியுள்ளது. 

team indias skipper kohlis reason to select batting first against west indies in second odi

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்தார். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் 3 டி20, முதல் ஒருநாள் போட்டி என அனைத்திலுமே டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி, இந்த போட்டியிலும் டாஸ் வென்றார்.

டாஸ் வென்ற கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். அதற்கு காரணம் தெரிவித்த கோலி, இந்த பிட்ச் போகப்போக ஸ்லோவாகிவிடும் என்பதைத்தான் வரலாறு பறைசாற்றுகிறது. எனவே இரண்டாவது இன்னிங்ஸில் பிட்ச் ரொம்ப ஸ்லோவாகிவிடும். இந்த பிட்ச்சின் தன்மையை கருத்தில்கொண்டு முதலில் பேட்டிங் ஆடுகிறோம். இரண்டாவது இன்னிங்ஸில் ஸ்பின்னர்கள் தான் முக்கிய பங்காற்றுவார்கள் என கருதுகிறேன் என கோலி தெரிவித்தார்.

team indias skipper kohlis reason to select batting first against west indies in second odi

இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித்தும் தவானும் களமிறங்கினர். முதல் ஓவரை கோட்ரெல் வீசினார். இரண்டாவது பந்தில் 2 ரன்கள் அடித்த தவான், மூன்றாவது பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ரோஹித்துடன் கோலி ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios