இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
இந்தியா - இலங்கை இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டி வரும் 24ம் தேதி லக்னோவிலும், அடுத்த 2 போட்டிகள் வரும் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தர்மசாலாவிலும் நடக்கின்றன.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் அந்த அணியை ஒயிட்வாஷ் செய்து வென்ற இந்திய அணி, அதே உத்வேகம் மற்றும் உற்சாகத்துடன் இலங்கையை எதிர்கொள்கிறது. ஆனால் இலங்கை அணியோ, ஆஸ்திரேலியாவிடம் 4-1 என டி20 தொடரை இழந்து மரண அடி வாங்கிவிட்டு இந்தியாவிற்கு வந்துள்ளது. எனவே இந்தியாவிடம் ஜெயிக்கும் முனைப்பில் உள்ளது.
நாளை மறுநாள் (24ம் தேதி) முதல் டி20 போட்டி நடக்கவுள்ள நிலையில், அந்த போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
ரோஹித் சர்மாவுடன் இஷான் கிஷன் தொடக்க வீரராக இறங்குவார். இந்த தொடரில் ரிஷப் பண்ட் ஆடாததால் இஷான் கிஷன் விக்கெட் கீப்பிங் செய்வார். விராட் கோலி இந்த தொடரில் ஆடாததால் ஷ்ரேயாஸ் ஐயர் 3ம் வரிசையில் ஆடுவார். சூர்யகுமார் யாதவ் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகிய இருவரும் முறையே 4 மற்றும் 5ம் வரிசைகளில் ஆடுவார்கள். அதன்பின்னர் ஆல்ரவுண்டர்கள் ஜடேஜா மற்றும் தீபக் சாஹர் ஆகிய இருவரும் இறங்குவார். ஜடேஜாவுடன் பிஷ்னோய் மற்றும் சாஹல் ஆகிய 2 ஸ்பின்னர்களுடன் ஆடுவார்கள்.
ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகிய இருவரும் ஆடுவார்கள். ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் தீபக் சாஹரும் ஆடுவதால் பவுலிங் ஆப்சன் நிறைய இருக்கும். பும்ரா, ஹர்ஷல் படேல், தீபக் சாஹர் ஆகிய மூவரும் ஃபாஸ்ட் பவுலர்கள். ஜடேஜா, பிஷ்னோய், சாஹல் ஆகிய மூவரும் ஸ்பின்னர்கள். இவர்களே 6 பவுலர்களாகிவிட்டார்கள். இவர்களுடன் வெங்கடேஷ் ஐயரும் பந்துவீசுவார். எனவே மொத்தம் 7 பவுலிங் ஆப்சன் இந்தியாவிடம் இருக்கிறது.
ஆல்ரவுண்டர்கள் நிறைந்திருப்பதால் இந்திய அணியிடம் இப்போது பவுலிங் ஆப்சன் நிறைய இருப்பது அணிக்கு பெரிய பலம்.
இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், ரவி பிஷ்னோய், யுஸ்வேந்திர சாஹல், ஹர்ஷல் படேல், பும்ரா.
