வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து 3-0 என இந்திய அணி வென்றது. 

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி மழையால் ரத்தானது. இந்நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. தொடரை வெல்ல வேண்டுமானால், இரு அணிகளில் ஒன்று, எஞ்சிய இரண்டு போட்டிகளிலுமே வெற்றி பெற்றாக வேண்டும். 

அதனால் இரு அணிகளுமே வெற்றி பெறும் முனைப்பில்தான் இறங்கும். தொடரை வெல்லும் உறுதியில்தான் இரு அணிகளும் இறங்கும் என்பதால் போட்டி கடுமையாக இருக்கும். இந்த போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் எதுவும் இருக்காது. முதல் போட்டியில் களமிறங்கிய அதே அணிதான் களமிறங்கும். 

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா(துணை கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், கேதர் ஜாதவ், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஜடேஜா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், ஷமி, கலீல் அகமது.