இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி மழையால் ரத்தானது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. 

தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடக்கிறது. இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்த போட்டியில் வென்று 2-0 என தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணியும், தொடரை இழந்துவிடாமல் சமன் செய்யும் முனைப்பில் தென்னாப்பிரிக்க அணியும் களமிறங்குகின்றன. 

தொடரை தீர்மானிக்கும் இந்த போட்டியில், கடந்த போட்டியில் ஆடிய அதே அணியுடன் தான் இந்திய அணி களமிறங்கும். இந்திய அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. ஏனெனில் மாற்றம் செய்வதற்கான தேவையில்லை. 

ரிஷப் பண்ட் தான் விக்கெட் கீப்பர். ஷ்ரேயாஸ் ஐயர், ஜடேஜா, க்ருணல் பாண்டியா, ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், நவ்தீப் சைனி ஆகியோரில் யாரையுமே நீக்கமுடியாது. அனைவருமே சிறப்பாக ஆடியுள்ளதால் எந்த மாற்றமும் இருக்காது. 

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா(துணை கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி(கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், நவ்தீப் சைனி.