இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். 

இந்தியா - இலங்கை இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நாளை லக்னோவில் நடக்கிறது. அடுத்த 2 போட்டிகள் வரும் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தர்மசாலாவில் நடக்கிறது.

இந்த தொடரில் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே மிடில் ஆர்டரில் ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவருக்குமே இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம் கிடைக்கும் சூழல் இருந்தது.

ஆனால் சூர்யகுமார் யாதவ் மற்றும் தீபக் சாஹர் ஆகிய இருவருமே காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகியுள்ளனர். எனவே அவர்களுக்கு பதிலாக முறையே சஞ்சு சாம்சன் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகிய இருவரும் இந்திய அணியில் ஆட வாய்ப்புள்ளது.

ரோஹித் சர்மா - இஷான் கிஷன் தொடக்க வீரர்கள். 3ம் வரிசையில் ஷ்ரேயாஸ் ஐயர், 4ம் வரிசையில் சாம்சன், 5ம் வரிசையில் வெங்கடேஷ் ஐயர். அதன்பின்னர் ஆல்ரவுண்டர் ஜடேஜா. ஃபாஸ்ட் பவுலர்களாக ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகிய மூவரும், ஸ்பின்னர்களாக ஜடேஜாவுடன், சாஹல் மற்றும் பிஷ்னோயும் ஆடுவார்கள். பவுலர்களில் ஹர்ஷல் படேல் நன்றாகவே பேட்டிங் ஆடுவார். எனவே இந்த அணியில் பேட்டிங் டெப்த்தும் இருக்கும். பவுலிங் ஆப்சனும் அதிகமாக இருக்கும்.

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வெங்கடேஷ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், பும்ரா.