உலக கோப்பை தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காத இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. 

நியூசிலாந்து அணி ஆடிய 3 போட்டிகளிலும் இந்திய அணி ஆடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளுமே தோல்வியை சந்தித்திராத நிலையில், இன்றைய போட்டியில் மோதுகின்றன. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அடைந்த காயம் காரணமாக தவான் இந்த போட்டியில் ஆடவில்லை. 

எனவே தவானுக்கு பதிலாக கேஎல் ராகுல், ரோஹித்துடன் தொடக்க வீரராக களமிறங்குவார். முதல் 2 போட்டிகளிலும் நான்காம் வரிசையில் இறங்கிய ராகுல் இந்த போட்டியில் தொடக்க வீரராக களமிறங்குவதால், அவர் இறங்கிய நான்காம் வரிசையில் விஜய் சங்கர் இறக்கப்படுவார்.

உலக கோப்பைக்கு முன்னதாக நியூசிலாந்துக்கு எதிராக நடந்த தொடரில் விஜய் சங்கர் சிறப்பாக ஆடினார். அந்த தொடரில் அவர் மிடில் ஆர்டரில் ஆடிய பேட்டிங் தான் அவர் உலக கோப்பை அணியில் எடுக்கப்பட முக்கிய காரணமாகவே அமைந்தது. மற்ற வீரர்களில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. 

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா, ராகுல், விராட் கோலி(கேப்டன்), விஜய் சங்கர், தோனி(விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், சாஹல், பும்ரா.