இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 

வெறும் 96 ரன்கள் என்ற இலக்கை 6 விக்கெட்டுகளை இழந்து 18வது ஓவரில்தான் இந்திய அணி வென்றது. அசால்ட்டாக அடித்திருக்கக்கூடிய இலக்கிற்கே இந்திய அணி போராடியது. வெஸ்ட் இண்டீஸ் அணி கூடுதலாக ஒரு 20 ரன்களை அடித்திருந்தால் இந்திய அணிக்கு கடும் சவால் அளித்திருக்கும்.

ஒருவழியாக முதல் போட்டியில் வென்றுவிட்டது இந்திய அணி. இரண்டாவது போட்டி இன்று நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது. 

கடந்த போட்டியில் ஆடாத ராகுல், இந்த போட்டியில் தவானுக்கு பதிலாக களமிறக்கப்பட வாய்ப்புள்ளது. டி20 போட்டிகளில் தவானுக்கு பதிலாக ராகுலையே தொடக்க வீரராக இறக்கலாம் என்ற கருத்து உள்ளது. அந்தவகையில், இன்றைய போட்டியில் தவானுக்கு பதிலாக ராகுல் இறக்கப்பட வாய்ப்புள்ளது. 

மேலும் கடந்த போட்டியில் ஆடிய வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ரிஸ்ட் ஸ்பின்னர் ராகுல் சாஹரும் கலீல் அகமதுவுக்கு பதில் தீபக் சாஹரும் அணியில் எடுக்கப்படலாம். 

2வது டி20 போட்டிக்கான உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா, ராகுல், விராட் கோலி(கேப்டன்), மனீஷ் பாண்டே, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), க்ருணல் பாண்டியா, ஜடேஜா, ராகுல் சாஹர், புவனேஷ்வர் குமார், நவ்தீப் சைனி, தீபக் சாஹர்.