இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணியுடன் 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆடுகிறது. 

இந்த தொடரின் முதல் 2 டி20 போட்டிகள் மட்டும் அமெரிக்காவில் நடக்கிறது. முதல் டி20 போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. 

டி20 தொடருக்கான இந்திய அணியில் குல்தீப், சாஹல் ஆகியோர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். ராகுல் சாஹர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இரண்டு ஸ்பின்னர்கள் எடுக்கப்பட்டுள்ளனர். ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் மனீஷ் பாண்டே ஆகிய இருவருக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது. 

ஆனால் மனீஷ் பாண்டே, ஐயர் ஆகிய இருவருக்குமே ஆடும் லெவனில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை. ரோஹித், தவான், கோலி, ராகுல், ரிஷப் ஆகிய ஐவரும் பேட்ஸ்மேன்களாக இருப்பர். ஐந்து பவுலர்கள் கண்டிப்பாக இருப்பார்கள். ஹர்திக் பாண்டியா இல்லாததால் கூடுதலாக ஒருவர் பந்துவீச ஏதுவாக இருக்க வேண்டியது அவசியம் என்பதால், ஆறு பவுலர்களுடன் இந்திய அணி ஆட வாய்ப்புள்ளது. 

க்ருணல் பாண்டியா, ஜடேஜா ஆகிய இருவரும் ஸ்பின் ஆல்ரவுண்டர்களாக இருப்பார்கள். ரிஸ்ட் ஸ்பின்னர் ராகுல் சாஹர் இருப்பார். இவர்கள் தவிர 3 ஃபாஸ்ட் பவுலர்கள். புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், நவ்தீப் சைனி ஆகிய மூவரும் இருப்பார்கள். கலீல் அகமதுவிற்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா, தவான், விராட் கோலி(கேப்டன்), ராகுல், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), க்ருணல் பாண்டியா, ஜடேஜா, ராகுல் சாஹர், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், நவ்தீப் சைனி.