Asianet News TamilAsianet News Tamil

டி20 உலக கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா கேப்டன் ரோஹித்.! நட்சத்திர வீரருக்கு இடம் இல்லை

டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
 

team india win toss opt to field against pakistan in t20 world cup match
Author
First Published Oct 23, 2022, 1:31 PM IST

டி20 உலக கோப்பையின் இன்றைய போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டி20 உலக கோப்பை தொடரில் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி இன்று மெல்பர்னில் நடக்கிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். ரோஹித், ராகுல், கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் - இதுதான் பேட்டிங் ஆர்டர் என்பது ஏற்கனவே உறுதியான விஷயம். ஸ்பின்னர்களாக அக்ஸர் படேல் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆடுகின்றனர்.

இதையும் படிங்க - முடியாததை முடித்து காட்டியிருக்கார்.. இப்படி ஒரு வீரரை நான் பார்த்ததே இல்ல! இந்திய வீரருக்கு பாண்டிங் புகழாரம்

யுஸ்வேந்திர சாஹலுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. ஃபாஸ்ட் பவுலர்களாக புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங் ஆகிய மூவரும் ஆடுகின்றனர்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் நியூசிலாந்திடம் படுதோல்வி அடைந்தது ஆஸ்திரேலியா

பாகிஸ்தான் அணி:

பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ஷான் மசூத், ஹைதர் அலி, முகமது நவாஸ், ஷதாப் கான், இஃப்டிகார் அகமது, ஆசிஃப் அலி, ஷாஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ராஃப், நசீம் ஷா.
 

Follow Us:
Download App:
  • android
  • ios