தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்று 2-0 என டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது.

நாளை(ஜூன் 14) நடக்கும் 3வது டி20 போட்டியிலும் தோற்றால் இந்திய அணி டி20 தொடரை இழந்துவிடும். எனவே தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க இந்த போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்திய அணி. தென்னாப்பிரிக்க அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது.

வெற்றி கட்டாயத்தில் களமிறங்கும் இந்திய அணி, முதலிரண்டு போட்டிகளில் செய்த தவறுகளை கலைந்து வெற்றி பெற முனைய வேண்டும். முதல் டி20 போட்டியில் 150 கிமீ வேகத்திற்கு மேல் அசால்ட்டாக பந்துவீசும் மிரட்டல் ஃபாஸ்ட் பவுலர் உம்ரான்மாலிக்கை ஆடவைக்காதது கடும் விமர்சனத்துக்குள்ளானது. 2வது போட்டியிலேயே மாற்றம் எதுவும் செய்யமுடியாது என்பதால், அந்த போட்டியிலும் அவர் ஆடவில்லை.

இந்நிலையில், நாளை நடக்கும் 3வது போட்டியில் ஒரு மாற்றம் மட்டும் செய்யப்பட வாய்ப்புள்ளது. ஆனால் இப்போதும் உம்ரான் மாலிக்கிற்கு இடம் கிடைக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. ஆவேஷ் கானுக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச இந்திய அணி:

இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்ஸர் படேல், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்.