இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி டிரா ஆனது. இந்தியா வெற்றி பெற்றிருக்க வேண்டிய அந்த போட்டியின் கடைசி நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால் போட்டி டிரா என்று அறிவிக்கப்பட்டது.
எனவே 2வது போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் இரு அணிகளுமே உள்ளன. 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி காம்பினேஷனில் மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் சேர்க்கப்படாதது விமர்சனத்துக்குள்ளானது. அஷ்வின் சேர்க்கப்படாமல், அவரைவிட நன்கு பேட்டிங் ஆடக்கூடியவர் என்பதால் ஸ்பின்னராக ஜடேஜா எடுக்கப்பட்டார். பும்ரா, ஷமி, சிராஜ், ஷர்துல் தாகூர் ஆகிய 4 பவுலர்களுடன் இந்திய அணி ஆடியது இந்திய அணி.
சீனியர் ஸ்பின்னரான அஷ்வின் எந்தவிதமான கண்டிஷனிலும், எந்தமாதிரியான சூழலிலும் ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர் அஷ்வின். எனவே 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அஷ்வின் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷர்துல் தாகூர் 2வது டெஸ்ட் போட்டிக்கான அணியிலிருந்து நீக்கப்படுவார். அவருக்கு பதிலாக கூடுதல் பேட்ஸ்மேனாக ஹனுமா விஹாரி, சேர்க்கப்பட்டால், 4 பவுலர்களுடன்(ஜடேஜா, பும்ரா, ஷமி, சிராஜ்) களமிறங்க வேண்டியிருக்கும். ஆனால் அது அணி காம்பினேஷனை பாதிக்கும். இந்திய அணி கண்டிப்பாக 5 பவுலர்களுடன் ஆடியாக வேண்டும். அதேவேளையில் பேட்டிங் ஆர்டரும் பாதிக்கப்படக்கூடாது. எனவே ஷர்துல் தாகூர் நீக்கப்பட்டு, அஷ்வின் சேர்க்கப்பட்டால் அணி காம்பினேஷன் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது.
அஷ்வின் அணியின் சீனியர் ஸ்பின்னர் மட்டுமல்லாது, நன்றாக பேட்டிங்கும் ஆடக்கூடியவர். எனவே பேட்டிங்கிற்கும் பங்கம் இருக்காது.
2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், புஜாரா, விராட் கோலி(கேப்டன்), அஜிங்க்யா ரஹானே(துணை கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, பும்ரா, முகமது சிராஜ்.
