இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். 

இந்தியா - இலங்கை இடையேயான ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என வென்றது. அதைத்தொடர்ந்து டி20 தொடர் நடந்துவருகிறது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதையடுத்து 2வது போட்டி நாளை கொழும்பில் நடக்கிறது. அந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது. தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க வெற்றி கட்டாயத்தில் களமிறங்குகிறது இலங்கை அணி.

அந்த போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். இந்திய அணியின் ஆடும் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. முதல் டி20 போட்டியில் களமிறங்கிய அதே ஆடும் லெவனுடன் தான் இந்திய அணி களமிறங்கும்.

உத்தேச இந்திய அணி:

ஷிகர் தவான்(கேப்டன்), பிரித்வி ஷா, சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன், க்ருணல் பாண்டியா, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், வருண் சக்கரவர்த்தி, யுஸ்வேந்திர சாஹல்.