Asianet News TamilAsianet News Tamil

இனிமேல் இழப்பதற்கு ஒன்றும் இல்லை.. நமீபியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள்..!

நமீபியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

team india probable playing eleven for the match against namibia in t20 world cup
Author
Dubai - United Arab Emirates, First Published Nov 8, 2021, 5:33 PM IST

டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக இந்த தொடரை தொடங்கிய இந்திய அணி, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக மோசமாக விளையாடி படுதோல்வி அடைந்ததன் விளைவாக அரையிறுதிக்குக்கூட முன்னேறாமல் சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறியது.

ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய சிறிய அணிகளுக்கு எதிராக அபார வெற்றியை இந்திய அணி பெற்றிருந்தாலும், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துக்கு ஆகிய பெரிய அணிகளுக்கு எதிராக படுதோல்வி அடைந்தது.

இந்த தொடரில் முதல் 2 போட்டிகளில் இந்திய அணியின் தோல்விக்கு தவறான அணி தேர்வு தான் காரணம். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சீனியர் ஸ்பின்னர் அஷ்வினை ஆடவைக்காதது, ஃபார்மில் இல்லாத புவனேஷ்வர் குமாரை ஆடவைத்தது என தவறு செய்தது இந்திய அணி. 

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் சூர்யகுமாருக்கு பதிலாக ஆடிய இஷான் கிஷனை தொடக்க வீரராக இறக்கியதில் பிரச்னையில்லை. ஆனால் ரோஹித்துடன் இஷான் கிஷனை தொடக்க வீரராக இறக்கிவிட்டு, ராகுலை சூர்யகுமாரின் பேட்டிங் ஆர்டரான 4ம் வரிசையில் இறக்கியிருக்கலாம். அதைவிடுத்து இஷான் கிஷனை ராகுலுடன் தொடக்க வீரராக இறக்கிவிட்டு, ரோஹித்தை 3ம் வரிசையில் இறக்கியதால் அணியின் மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறியது. அதன்விளைவாக, மற்றுமொரு படுதோல்வியை அடைய நேர்ந்தது. 

அதன்பின்னர் ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டிகளில் வெற்றி பெற்றாலும், முதல் 2 போட்டிகளில் அடைந்த தோல்விகளின் காரணமாக அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் சூப்பர் 12 சுற்றுடன் இந்த தொடரிலிருந்து வெளியேறியது.

ஏற்கனவே இந்த தொடரைவிட்டு வெளியேறிவிட்ட இந்திய அணி, இன்று நடக்கும் கடைசி சூப்பர் 12 சுற்றில் அனுபவமற்ற அசோஸியேட் அணியான நமீபியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் இந்திய அணிக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. எப்படியும் நமீபியாவை இந்திய அணி வீழ்த்திவிடும். ஆனால் அந்த வெற்றியால் எந்த பயனும் இல்லை. 

team india probable playing eleven for the match against namibia in t20 world cup

எனவே நமீபியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில், ஆடாத வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில், சீனியர் வீரரான ரோஹித் அல்லது சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரில் ஒருவருக்கு பதிலாக இஷான் கிஷன் ஆட வாய்ப்புள்ளது. அதேபோல ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக முதல் 4 போட்டிகளிலும் ஆட வாய்ப்பு பெறாத ரிஸ்ட் ஸ்பின்னர் ராகுல் சாஹருக்கு இன்று வாய்ப்பளிக்கப்படலாம். 

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் ஆடியதற்கு பிறகு அப்படியே ஓரங்கட்டப்பட்ட ஃபாஸ்ட் பவுலர் புவனேஷ்வர் குமார் அல்லது ஷர்துல் தாகூர் ஆகிய இருவரில் ஒருவர் இன்றைய போட்டியில் ஷமிக்கு பதிலாக ஆட வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க - நீங்க சொல்றது ஒண்ணும் செய்றது ஒண்ணுமா-வுல இருக்கு..! இந்திய அணி தேர்வை கடுமையாக விளாசிய ஹர்பஜன் சிங்

உத்தேச இந்திய அணி:

கேஎல் ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), சூர்யகுமார் யாதவ்/இஷான் கிஷன், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாகூர்/புவனேஷ்வர் குமார்/ஷமி, ராகுல் சாஹர், பும்ரா.

இதையும் படிங்க - நாட்டுக்காக ஆடுறத விட ஐபிஎல் தான் இவங்களுக்கு முக்கியமா போச்சு! பிசிசிஐ உடனே நடவடிக்கை எடுக்கணும் - கபில் தேவ்

Follow Us:
Download App:
  • android
  • ios