Asianet News TamilAsianet News Tamil

#SLvsIND தொடரை தீர்மானிக்கும் கடைசி டி20: இந்திய அணியில் என்னென்ன மாற்றங்கள்..? உத்தேச ஆடும் லெவன்

இலங்கைக்கு எதிரான கடைசி டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

team india probable playing eleven for the last t20 against sri lanka
Author
Colombo, First Published Jul 29, 2021, 3:14 PM IST

இந்தியா - இலங்கை இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. கடந்த 27ம் தேதி நடப்பதாக இருந்த 2வது டி20 போட்டி, க்ருணல் பாண்டியாவுக்கு கொரோனா உறுதியானதால் நேற்று(28ம் தேதி) நடந்தது.

க்ருணல் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அவருடன் தொடர்பில் இருந்த வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அந்தவகையில், 2வது போட்டியில் பிரித்வி ஷா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தீபக் சாஹர், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் ஆடவில்லை.

அதனால் ருதுராஜ் கெய்க்வாட், தேவ்தத் படிக்கல், நிதிஷ் ராணா, சேத்தன் சக்காரியா ஆகிய வீரர்கள் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகும் வாய்ப்பை பெற்றனர். இந்திய அணி இருக்கிற வீரர்களை வைத்து ஆட வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால், 5 பேட்ஸ்மேன்கள் மற்றும் 6 பவுலர்கள் என்ற காம்பினேஷனுடன், இருக்கிற வீரர்களுடன் களமிறங்கியது.

2வது டி20யில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 132 ரன்கள் மட்டுமே அடித்தது. 133 ரன்கள் என்பது மிக எளிதானது என்பதால், இந்திய அணி எவ்வளவோ போராடியும் தோல்வியை தழுவியது. இதையடுத்து டி20 தொடர் 1-1 என சமனடைந்தது.

தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி இன்று நடக்கிறது. கடந்த போட்டியில் களமிறங்கிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் இந்திய அணி இந்த போட்டியிலும் ஆடும். இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்பட வாய்ப்பில்லை.

இந்திய அணி:

ஷிகர் தவான்(கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர்), நிதிஷ் ராணா, புவனேஷ்வர் குமார், நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், ராகுல் சாஹர், சேத்தன் சக்காரியா, வருண் சக்கரவர்த்தி.
 

Follow Us:
Download App:
  • android
  • ios