கொரோனாவால் அனைத்து கிரிக்கெட் தொடர்களும் தள்ளிப்போன நிலையில், உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடரும் தள்ளிப்போனது. ஒருவழியாக பிசிசிஐ, 2021 ஜனவரி 10 முதல் 31 வரையிலான காலக்கட்டத்தில் சையத் முஷ்டாக் அலி தொடரை நடத்த முடிவு செய்துள்ளது.

மொத்தம் ஆறு மாநிலங்களில் போட்டிகள் நடக்கவுள்ளன. இந்த தொடருக்கான மாநில அணிகளில் இடம்பெற்றுள்ள வீரர்கள் ஜனவரி 2ம் தேதியே முகாமிற்கு வந்துவிடவேண்டும். இந்த தொடருக்கான 26 வீரர்களை கொண்ட தமிழ்நாடு அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாடு அணியில், முரளி விஜய், பாபா அபரஜித், விஜய் சங்கர், ஷாருக்கான், சாய் கிஷோர், முருகன் அஷ்வின், சித்தார்ட் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இடது கை ஓபனிங் பேட்ஸ்மேன் அபினவ் முகுந்த் அணியில் இல்லை.

சையத் முஷ்டாக் அலி தொடருக்கான தமிழ்நாடு அணி:

தினேஷ் கார்த்திக், முரளி விஜய், பாபா அபரஜித், பாபா இந்திரஜித், விஜய் சங்கர், ஷாருக்கான், ஹரி நிஷாந்த், பிரதோஷ் ரஞ்சன் பால், கேபி அருண் கார்த்திக், அக்‌ஷய் ஸ்ரீநிவாசன், ஜெகதீஷன், எம்.அபினவ், அஷ்வின் க்றிஸ்ட், முகமது, பெரியசாமி, சந்தீப் வாரியர், ஹரீஷ் குமார், கே விக்னேஷ், சிலம்பரசன், ஜே கௌஷிக், ஆர் சோனு யாதவ், முருகன் அஷ்வின், சாய் கிஷோர், சித்தார்த் மணிமாறன், சத்தியநாராயணன், அருண்மொழி.