Asianet News TamilAsianet News Tamil

கோவையில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழகத்தில் 2ஆவது சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் கோயம்புத்தூரில் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Tamil Nadu CM MK Stalin accept TRB Raja's request and announced that an international cricket stadium will be constructed in Coimbatore rsk
Author
First Published Apr 7, 2024, 5:54 PM IST

கிரிக்கெட் மீதான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பெண்களும் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். இந்த நிலையில், தான் கோவையில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க வேண்டும் என்று டிஆர்பி ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் கோரிக்கை வைத்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது: கோவையில், கடந்த சில நாட்களாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறோம். அப்போது விளையாட்டுகளில் ஆர்வமுள்ள இளைஞர்களை சந்திக்க நேரிட்டது. அவர்கள் துப்பாக்கி சுடுதல், கார் பந்தயம், கால்பந்து, ஸ்கேட்டிங், தடகளம், குதிரையேற்றம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் ஆர்வமாக இருக்கிறார்கள்.

கிரிக்கெட்டில் மீது அளவுகடந்த ஆர்வம் வைத்துள்ளனர். தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 3 அணிகளின் உரிமையாளர்களின் தாயகமாக கோயம்புத்தூர் விளங்குகிறது. மேலும், வளர்ந்து வரும் கிரிக்கெட் நட்சத்திரங்களில் பலரும் தமிழகத்தின் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். ஆதலால் கோவை உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் விளையாட்டு உள்கட்டமைப்பில் ஊக்கம் தேவை.

இதனை கருத்தில் கொண்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் கடந்த ஒரு வருட காலமாக செயல்பட்டு வருகிறார். கோவை மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள இளைஞர்களின் திறமைகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டின் மற்றொரு உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் ஸ்டேடியத்தை உருவாக்க வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை வைத்தார்.

மேலும், இந்த ஸ்டேடியம் பசுமை, நீர் சேமிப்பு மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். இது நெட் ஜீரோ ஸ்டேடியமாக இருக்கலாம். இந்த வளமான மைதானத்தை அமைத்து கொடுத்து எங்களது வளமான விளையாட்டு திறமைகளை வளர்க்க வேண்டும் என்று முதல்வரை கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், விளையாட்டு மற்றும் கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டவர் என்ற முறையில் வரும் நாடாளுமன்ற தேர்தல் 2024 திமுக வாக்குறுதியாக தேர்தல் அறிக்கையில் இதை சேர்க்க விரும்புகிறேன். கோவையில், அதிநவீன கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க முயற்சி எடுப்போம். டிஆர்பி ராஜாவைப் போன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் சேப்பாக்கம் மைதானத்தைப் போன்று கோவையில் புதிய மைதானம் உருவாக வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார். இது தமிழகத்தின் 2ஆவது சர்வதேச கிரிக்கெட் மைதானமாக இருக்க வேண்டும் என்று கூறியதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios