பிக்பேஷ் லீக் தொடரின் இன்றைய போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பிரிஸ்பேன் ஹீட்  அணியில் யாருமே சரியாக பேட்டிங் ஆடவில்லை. கிறிஸ் லின், டிவில்லியர்ஸ் என அதிரடி பேட்டிங் படை இருந்தும் கூட, யாருமே சரியாக ஆடவில்லை. டிவில்லியர்ஸ் படுமந்தமாக பேட்டிங் ஆடி 26 பந்தில் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் 25 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். லபுஷேனும் ஏமாற்றமளித்தார். லபுஷேன் வெறும் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து பிரிஸ்பேன் ஹீட் அணி 20 ஓவரில் வெறும் 126 ரன்கள் மட்டுமே அடித்தது. 127 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஜோஷ் ஃபிலிப் மற்றும் ஜேம்ஸ் வின்ஸ் ஆகிய இருவரும் இணைந்து சிறப்பாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். 

Also Read - ஒருவழியா ஒருநாள் அணியில் ராகுலின் பேட்டிங் ஆர்டரை உறுதி செய்தார் கேப்டன் கோலி

சிறப்பாக ஆடிய இருவருமே அரைசதம் அடித்தனர். 37 பந்தில் 51 ரன்கள் அடித்து வின்ஸ் ஆட்டமிழந்தார். இதையடுத்து களத்திற்கு வந்த ஸ்மித் 9 பந்தில் வெறும் 9 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ஜோஷ் ஃபிலிப்பும் அரைசதம் அடித்தார். இலக்கு எளிதானது என்பதால் 16வது ஓவரிலேயே இலக்கை எட்டி சிட்னி சிக்ஸர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.