பிக்பேஷ் லீக்கின் இன்றைய போட்டியில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் மோதின. ஹோபர்ட்டில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற அடிலெய்டு அணி, சிட்னியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.

முதலில் பேட்டிங் செய்த சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் கேப்டன் டேனியல் ஹியூக்ஸ் சிறப்பாக ஆடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 41 பந்தில் 46 ரன்கள் அடித்திருந்தார். அவரது இன்னிங்ஸ், கிறிஸ்டியனின் அதிரடிக்கு ஆதரவாக மட்டுமே இருந்தது. காட்டடி அடித்த கிறிஸ்டியன், வெறும் 16 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்ஸர்களுடன் அரைசதம் அடித்து, சிக்ஸர்ஸ் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். கிறிஸ்டியனின் அதிரடியால் 20 ஓவரில் சிக்ஸர்ஸ் அணி 177 ரன்களை குவித்தது.

178 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய அலெக்ஸ் கேரி தலைமையிலான அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியில் யாருமே பெரிய இன்னிங்ஸ் ஆடாத நிலையில், அந்த அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே அடித்த நிலையில், 38 ரன்கள் வித்தியாசத்தில் சிட்னி சிக்ஸர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.