2026 டி20 உலகக் கோப்பை வரை இந்தியாவின் புதிய கேபடன் சூர்யகுமார் யாதவ்? ஹர்திக் பாண்டியாவின் நிலை?

வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடர் வரையில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Suryakumar Yadav likely to be appointed as India's new T20i captain till 2026 T20 World Cup rsk

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2ஆவது முறையாக டி20 உலகக் கோப்பை டிராபியை கைப்பற்றிய புதிய சாதனை படைத்தது. இதையடுத்து விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி20 கிரிக்கெட்டிலிருந்து அடுத்தடுத்து ஓய்வு பெற்றனர். டி20 உலகக் கோப்பை தொடரைத் தொடர்ந்து சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.

திருச்சியை அசால்ட்டா ஊதி தள்ளிய லைகா – கோவை கிங்ஸ்கிற்கு கிடைத்த 4 ஆவது வெற்றி – பட்டியலில் டாப் இடம்!

இதில், முதல் போட்டியில் தோல்வி அடைந்து எஞ்சிய 4 போட்டிகளில் வெற்றி பெற்று 4-1 என்று தொடரை கைப்பற்றியது. ஜிம்பாப்வே தொடரைத் தொடர்ந்து இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இதற்கான இந்திய அணி இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் தான் இந்திய அணி டி20 தொடருக்கான புதிய கேப்டனை தேடும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஹர்திக் பாண்டியா தனிப்பட்ட காரணம் தொடர்பான இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரிலிருந்து விலகிவிட்டார். ஆனால், டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா பரிசீலிக்கப்பட்ட நிலையில், 2026 டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு சூர்யகுமார் யாதவ்வை டி20 தொடருக்கு கேப்டனாக நியமிக்க அணி நிர்வாக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

Paris Olympic Games 2024: பாரீஸ் 2024 ஒலிம்பிக் பதக்கங்களின் விலை, எடை எவ்வளவு தெரியுமா?

ஏற்கனவே ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான டி20 போட்டிகளுக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக இருந்து அணிக்கு வெற்றி தேடி கொடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்று கைப்பற்றியுள்ளார். இதே போன்று தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என்று கைப்பற்றியுள்ளார். 2026 டி20 உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருக்கும் நிலையில் அதுவரையிலும் டி20 அணிக்கு ஒரு கேப்டனை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாகத்தான் சூர்யகுமார் யாதவ் பரிசீலிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், இலங்கை தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அறிவிக்கப்படவில்லை. எப்படியும் இந்த வார இறுதிக்குள்ளாக இந்திய அணி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித், கோலி, பும்ரா விளையாட வேண்டும் – காம்பீர் வேண்டுகோள்!

மேலும் இலங்கை தொடருக்கு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்த நிலையில் இலங்கை தொடருக்கு பிறகு கிட்டத்தட்ட ஒரு மாதம் ஓய்வு இருக்கும் நிலையில் அவர்கள் மூவரும் இலங்கை தொடரில் விளையாட இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர் வேண்டுகோள் வைத்துள்ளார்.

டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி டிராபி வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர்களில் சூர்யகுமார் யாதவ்வும் ஒருவர். இறுதிப் போட்டியில் கடைசி ஓவரில் அவர் பிடித்த மில்லரது கேட்ச் போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தி இந்திய அணிக்கு டிராபியை வென்று கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios