கொரோனா அச்சுறுத்தலால் மார்ச் 29ம் தேதி தொடங்கியிருக்க வேண்டிய ஐபிஎல் 13வது சீசன், காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மார்ச் மாத மத்தியிலிருந்து கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடக்காத நிலையில், 4 மாதங்களுக்கு பிறகு இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடந்துவருகிறது.

4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியிருப்பது, நல்ல சமிக்ஞையாக அமைந்துள்ளது. மற்ற அணிகளின் வீரர்களும் டிரெய்னிங்கை தொடங்கிவிட்டனர். மீண்டும் களம் காண அனைத்து வீரர்களும் தயாராகிவருகின்றனர்.

தென்னாப்பிரிக்க வீரர்கள் 3 அணிகளாக பிரிந்து பயிற்சி ஆட்டத்தில் ஆடினர். ஐபிஎல் செப்டம்பர் இறுதியில் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வீரர்கள், பயிற்சியை தொடங்கிவிட்டனர். 

அந்தவகையில், சுரேஷ் ரெய்னா, ஷமி, பியூஷ் சாவ்லா ஆகிய மூவரும் பயிற்சி எடுத்த வீடியோவை சுரேஷ் ரெய்னா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ஷமி மற்றும் பியூஷ் சாவ்லா ஆகிய இருவரும் பந்துவீச ரெய்னா பேட்டிங் ஆடி பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வீடியோவை சுரேஷ் ரெய்னா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கிரிக்கெட் வீரர்கள் மீண்டும் பயிற்சியை தொடங்கியிருப்பது ரசிகர்களுக்கு உற்சாகமாகப்படுத்தியுள்ளது. ஐபிஎல்லில் ரெய்னா மற்றும் பியூஷ் சாவ்லா ஆகிய இருவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் ஷமி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிலும் ஆடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.