Asianet News TamilAsianet News Tamil

#RRvsSRH வார்னருக்கு பதில் களமிறக்கப்பட்ட ஆல்ரவுண்டர்..! SRHல் 3 மாற்றங்கள், RRல் 2 மாற்றங்கள்..!

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
 

sunrisers hyderabad win toss opt to field against rajasthan royals in ipl 2021
Author
Delhi, First Published May 2, 2021, 3:20 PM IST

ஐபிஎல் 14வது சீசன் புள்ளி பட்டியலில் கடைசி 2 இடங்களில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டி டெல்லியில் நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் கேன் வில்லியம்சன், ராஜஸ்தான் அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்ட வார்னர் இந்த போட்டியில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக ஆஃப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் முகமது நபி அணியில் எடுக்கப்பட்டுள்ளார். மேலும் ஜெகதீஷா சுஜித்திற்கு பதிலாக அப்துல் சமாத் ஆடுகிறார். புவனேஷ்வர் குமார் அணியில் இணைந்ததால் சித்தார்த் கவுல் நீக்கப்பட்டுள்ளார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

ஜானி பேர்ஸ்டோ, அப்துல் சமாத், கேன் வில்லியம்சன்(கேப்டன்), மனீஷ் பாண்டே, விஜய் சங்கர், கேதர் ஜாதவ், முகமது நபி, ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், சந்தீப் ஷர்மா, கலீல் அகமது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஷிவம் துபேவுக்கு பதிலாக அனுஜ் ராவத் என்ற வீரர் அறிமுகமாகிறார். உனாத்கத்திற்கு பதிலாக கார்த்திக் தியாகி சேர்க்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

பட்லர், ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன்(கேப்டன், விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், ரியான் பராக், அனுஜ் ராவத், கிறிஸ் மோரிஸ், ராகுல் டெவாட்டியா, கார்த்திக் தியாகி, சகாரியா, முஸ்தாஃபிசுர் ரஹ்மான்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios