IPL 2023: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - மும்பை இந்தியன்ஸ் போட்டி டாஸ் ரிப்போர்ட்..! மும்பை அணியில் ஒரு அதிரடி மாற்றம்
ஐபிஎல் 16வது சீசனில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்று ஹைதராபாத்தில் நடக்கும் போட்டியில் சன்ரைசர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளுமே கடைசி 2 போட்டிகளில் ஜெயித்த நிலையில், ஹாட்ரிக் வெற்றியை பெற்று வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பில் களமிறங்கியுள்ளன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் ஐடன் மார்க்ரம் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
IPL 2023: மற்ற அணிகள் எல்லாம் வீரர்களை தேடுகின்றன.. தோனி மட்டும் தான் வீரர்களை உருவாக்குகிறார்..!
இந்த போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த போட்டியில் ஆடிய டுவான் யான்சென் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஜேசன் பெஹ்ரண்டார்ஃப் சேர்க்கப்பட்டுள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:
மயன்க் அகர்வால், ஹாரி ப்ரூக், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசன், அபிஷேக் ஷர்மா, வாஷிங்டன் சுந்தர், மார்கோ யான்சென், புவனேஷ்வர் குமார், மயன்க் மார்கண்டே, டி.நடராஜன்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், கேமரூன் க்ரீன், அர்ஜுன் டெண்டுல்கர், நெஹல் வதேரா, ரித்திக் ஷோகீன், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரண்டார்ஃப்.