Asianet News TamilAsianet News Tamil

SRH vs PBKS: டாஸ் ரிப்போர்ட்.. பஞ்சாப் கிங்ஸில் 3, சன்ரைசர்ஸில் 2 மாற்றங்கள்

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

sunrisers hyderabad win toss opt to bat against punjab kings in ipl 2022
Author
Mumbai, First Published May 22, 2022, 7:22 PM IST

ஐபிஎல் 15வது சீசனில் இன்று நடக்கும் கடைசி லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் ஆர்சிபி ஆகிய 4 அணிகளும் பிளே ஆஃபிற்கு முன்னேறிவிட்டதால் இன்று நடக்கும் போட்டி புள்ளி பட்டியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

மும்பை வான்கடேவில் நடக்கும் இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் வில்லியம்சன் ஆடவில்லை. அதனால் புவனேஷ்வர் குமார் கேப்டன்சி செய்கிறார். டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் புவனேஷ்வர் குமார் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

சன்ரைசர்ஸ் அணியில் 2மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரொமாரியோ ஷெஃபெர்டு மற்றும் ஜெகதீஷா சுஜித் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

அபிஷேக் ஷர்மா, ப்ரியம் கர்க், ராகுல் திரிபாதி, மார்க்ரம், நிகோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ரொமாரியோ ஷெஃபெர்டு, வாஷிங்டன் சுந்தர், ஜெகதீஷா சுஜித், புவனேஷ்வர் குமார் (கேப்டன்), ஃபஸால்ஹக் ஃபரூக்கி, உம்ரான் மாலிக்.

பஞ்சாப் கிங்ஸ் அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பானுகா ராஜபக்சா, ரிஷி தவான், ராகுல் சாஹர் ஆகிய மூவரும் நீக்கப்பட்டு, நேதன் எல்லிஸ், ஷாருக்கான், ப்ரெரக் மன்கத் ஆகிய மூவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பஞ்சாப் கிங்ஸ் அணி:

ஜானி பேர்ஸ்டோ, ஷிகர் தவான், லியாம் லிவிங்ஸ்டோன், மயன்க் அகர்வால் (கேப்டன்), ஷாருகான், ஜித்தேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), ஹர்ப்ரீத் ப்ரார், நேதன் எல்லிஸ், ப்ரெரக் மன்கத், ரபாடா, அர்ஷ்தீப் சிங்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios