சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் சிஎஸ்கேவும் மோதுகின்றன. சிஎஸ்கே அணியின் கேப்டன்சியிலிருந்து ஜடேஜா விலகியதால், இந்த போட்டியிலிருந்து தோனி தான் கேப்டனாக செயல்படுகிறார்.
புனேவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் என்ற சன்ரைசர்ஸ் கேப்டன் கேன் வில்லியம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். சன்ரைசர்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மாற்றம் செய்வதற்கான அவசியமே இல்லை. அந்த அணி அருமையாக ஆடிக்கொண்டிருப்பதால், அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் களமிறங்கியுள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:
அபிஷேக் ஷர்மா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராகுல் திரிபாதி, மார்க்ரம், நிகோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஷஷான்க் சிங், வாஷிங்டன் சுந்தர், மார்கோ யான்சென், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக், டி.நடராஜன்.
சிஎஸ்கே அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஒருவழியாக நியூசிலாந்தை சேர்ந்த அதிரடி டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான டெவான் கான்வேவுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைத்துள்ளது. பிராவோ மற்றும் ஷிவம் துபே ஆகிய இருவரும் நீக்கப்பட்டு முறையே டெவான் கான்வே மற்றும் சிமர்ஜீத் சிங் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சிஎஸ்கே அணி:
ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, டெவான் கான்வே, அம்பாதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), மிட்செல் சாண்ட்னெர், ட்வைன் பிரிட்டோரியஸ், சிமர்ஜீத் சிங், முகேஷ் சௌத்ரி, மஹீஷ் தீக்ஷனா.
