சிஎஸ்கேகிட்ட கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்கிய குஜராத் டைட்டன்ஸ் – 162 ரன்னுக்கு சுருண்ட SRH!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான 12ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் குவித்தது.

Sunrisers Hyderabad Scored 162 Runs against Gujarat Titans in 12th IPL 2024 Match at Ahmedabad rsk

அகமதாபாத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான 12ஆவது ஐபிஎல் லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி மாயங்க் அகர்வால் மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

இந்தப் போட்டியிலும் மாயங்க் அகர்வால் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து டிராவிஸ் ஹெட், நூர் அகமது பந்தில் கிளீன் போல்டானார். கடந்த போட்டியில் 18 ரன்களில் அரைசதம் அடித்த அவர் இந்த இந்தப் போட்டியில் 19 ரன்கள் மட்டுமே ஆட்டமிழந்தார். அபிஷேக் சர்மாவும் 29 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த எய்டன் மார்க்ரம் 17 ரன்களில் நடையை கட்டினார்.

ஹென்ரிச் கிளாசென் 24, ஷாபாஸ் அகமது 22, வாஷிங்டன் சுந்தர் 0 என்று ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசில அப்துல் சமாத் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத அணி வீரர்கள் ஒருவர் கூட அரைசதம் அடிக்கவில்லை. இந்தப் போட்டியில் அதிகபட்ச ஸ்கோரே 29 ரன்கள் மட்டுமே ஆகும். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 277 ரன்கள் குவித்த நிலையில் இந்தப் போட்டியில் 162 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

இதற்கு முன்னதாக இந்த மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் 168/6 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் மோகித் சர்மா 3 விக்கெட்டும், அஸ்மதுல்லா உமர்சாய், உமேஷ் யாதவ், ரஷீத் கான், நூர் அகமது ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios