Asianet News TamilAsianet News Tamil

என்னப்பா வார்னர் சேட்டையா? அவரு இல்லாம நீங்க ஜெயிக்கவே முடியாது; உடனே டீம்ல சேருங்க! SRH ரசிகர்கள் கொந்தளிப்பு

கேன் வில்லியம்சனை சன்ரைசர்ஸ் அணியின் ஆடும் லெவனில் சேர்க்குமாறு வலியுறுத்தல்கள் வலுத்துவருகின்றன. 
 

 

sunrisers hyderabad fans emphasis to include kane williamson for ipl 2021
Author
Chennai, First Published Apr 15, 2021, 5:13 PM IST

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பொதுவாகவே பவுலிங்கில் வலுவான அணி. பேட்டிங்கைவிட பவுலிங் தான் அந்த அணியின் பெரிய பலம். பேட்டிங்கை பொறுத்தமட்டில், டாப் ஆர்டர் வலுவான அணி. வார்னர், பேர்ஸ்டோ, சஹா என மிரட்டலான டாப் ஆர்டர் பேட்டிங்கை கொண்ட சன்ரைசர்ஸ் அணியின் மிடில் ஆர்டர் பலவீனமாக உள்ளது.

களத்தில் செட்டில் ஆனாலும் போட்டியை வெற்றிகரமாக முடித்துக்கொடுக்க முடியாது மனீஷ் பாண்டே, நம்பமுடியாத விஜய் சங்கர், இளம் அப்துல் சமாத், அடித்து ஆடினாலும் பெரிய இன்னிங்ஸ் ஆடமுடியாத ரஷீத் கான் என பலவீனமான மிடில் ஆர்டரை பெற்றிருப்பதுதான் சன்ரைசர்ஸ் அணியின் தோல்விக்கு காரணம்.

sunrisers hyderabad fans emphasis to include kane williamson for ipl 2021

அந்த அணியின் மிடில் ஆர்டர் சோகம் இன்னும் தொடர்கிறது. வில்லியம்சன் இல்லாத சன்ரைசர்ஸ் அணி வார்னர் மற்றும் பேர்ஸ்டோவையே அதிகமாக பேட்டிங்கில் சார்ந்திருக்கிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் கேகேஆருக்கு எதிராக வென்றிருக்க வேண்டிய போட்டியில் தோற்ற சன்ரைசர்ஸ் அணி, ஆர்சிபிக்கு எதிரான போட்டியிலும் 8 ஓவரில் 52 ரன்களை அடிக்க முடியாமல், வார்னர் ஆட்டமிழந்ததும் மளமளவென சரிந்த பேட்டிங் ஆர்டரால், 6 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

சன்ரைசர்ஸ் அணியின் நட்சத்திர வீரரான கேன் வில்லியம்சனை ஆடும் லெவனில் சேர்க்காததால் தான் இந்த தோல்விகள். மிடில் ஆர்டருக்கு வலுசேர்த்து, இலக்கை விரட்டி போட்டியை வெற்றிகரமாக முடித்துக்கொடுக்க வல்ல வில்லியம்சனை ஓரங்கட்டிவிட்டு ஆடுவதால் தான் சன்ரைசர்ஸ் அணி தோற்றுவருகிறது. 

வில்லியம்சன் இன்னும் போட்டிகளில் ஆட தயாராக இல்லை என்று கூறினார் கேப்டன் வார்னர். ஆனால் இது சமாளிப்பதற்காக கூறப்பட்ட காரணமாகவே பார்க்கப்படுகிறது. வார்னர் ஆடாத 2018 சீசனில் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இருந்து ஃபைனல் வரை அழைத்துச்சென்றவர் வில்லியம்சன். அப்பேர்ப்பட்ட சிறந்த பேட்டிங் மற்றும் தலைமைத்துவ பண்புகளை கொண்ட வில்லியம்சனை அதற்கடுத்த 2 சீசன்களிலுமே ஆரம்பத்தில் சில போட்டிகளில் ஓரங்கட்டிவிட்டு, சில தோல்விகளுக்கு பின்னர், வில்லியம்சனின் தேவை ஏற்பட்ட பின்னர் ஆட வாய்ப்பு கொடுப்பதையும் சன்ரைசர்ஸ் அணி வழக்கமாக கொண்டுள்ளது.

sunrisers hyderabad fans emphasis to include kane williamson for ipl 2021

சீசனின் தொடக்கத்தில் வில்லியம்சனை ஓரங்கட்ட அவுருடனான வார்னருக்கு ஈகோ இருக்குமோ என்ற சந்தேகமும் எழாமல் இல்லை. ஏனெனில் ஒவ்வொரு சீசனிலும் இதே வாடிக்கையாக உள்ளது. சில தோல்விகளுக்கு பின்னர், வில்லியம்சனின் அவசியத்தை உணர்ந்த பின்புதான் சேர்க்கப்படுகிறார். சன்ரைசர்ஸ் ஜெயிப்பதற்கு வில்லியம்சன் தேவையில்லை என்ற உணர்வுடன் ஒவ்வொரு சீசனையும் தொடங்கும் வார்னர், பின்னர் அவர் இல்லாமல் வெற்றி சாத்தியமில்லை என்பதை உணர்ந்து கட்டாயத்தின் பேரில் சேர்க்கிறார். 

அதே நிலைதான் இந்த சீசனிலும்.. கேகேஆர் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்த தோல்விகளை சன்ரைசர்ஸ் அணி அடைந்ததன் விளைவாக, வில்லியம்சனை சேர்க்குமாறு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வலியுறுத்திவருகின்றனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios