Asianet News TamilAsianet News Tamil

#SRHvsDC இனிமேல் அவருக்கு சன்ரைசர்ஸ் அணியில் இடமே இல்ல..! சன்ரைசர்ஸ், கேபிடள்ஸ் அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் மோதும் இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

sunrisers hyderabad and delhi capitals probable playing eleven for today match in ipl 2021
Author
Chennai, First Published Apr 25, 2021, 4:22 PM IST

ஐபிஎல் 14வது சீசனில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் ஆடுகளத்தி இந்த போட்டி நடக்கிறது.

இந்த சீசனின் முதல் 3 போட்டிகளிலும் தோல்வியடைந்த சன்ரைசர்ஸ் அணி, 4வது போட்டியில் கேன் வில்லியம்சனை அணிக்குள் கொண்டுவந்தது. எளிதான மேட்ச்களை கூட சன்ரைசர்ஸ் அணிக்கு வென்று கொடுக்க முடியாத மனீஷ் பாண்டேவை, பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டு அணியிலிருந்து தூக்கியது சன்ரைசர்ஸ் அணி. கடந்த போட்டியில் அவர் ஆடாத நிலையில், இன்றைய போட்டியிலும், இனிவரும் போட்டிகளிலும் கூட ஆட வாய்ப்பில்லை. 

சன்ரைசர்ஸ் அணியின் கடந்த போட்டியில் ஆடிய ஆடும் லெவன் காம்பினேஷன் நன்றாக இருந்தது. எனவே அதே காம்பினேஷனுடன் தான் இன்றைய போட்டியிலும் ஆடும்.

உத்தேச சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

டேவிட் வார்னர்(கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ(விக்கெட் கீப்பர்), கேன் வில்லியம்சன், விராட் சிங், விஜய் சங்கர், அபிஷேக் ஷர்மா, கேதர் ஜாதவ், ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, சித்தார்த் கவுல்.

டெல்லி கேபிடள்ஸ் அணியிலும் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. அந்த அணியும் கடந்த போட்டியில் ஆடிய அதே காம்பினேஷனுடன் தான் களமிறங்கும்.

உத்தேச டெல்லி கேபிடள்ஸ் அணி:

பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்டீவ் ஸ்மித், ரிஷப் பண்ட்(கேப்டன், விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஷிம்ரான் ஹெட்மயர், லலித் யாதவ், அஷ்வின், ரபாடா, அமித் மிஷ்ரா, ஆவேஷ் கான். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios