Asianet News TamilAsianet News Tamil

நான் மத்தவங்க மாதிரி இல்ல.. வித்தியாசமானவன் - மனம் திறந்த கவாஸ்கர்

தனது காலத்தில் ஆடிய மற்ற வீரர்களை போல அல்ல நான்; எனக்கு டி20 கிரிக்கெட் மிகவும் பிடிக்கும் என்று சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
 

sunil gavaskar opines he loves t20 cricket and he likes de villiers batting
Author
Chennai, First Published Jun 3, 2021, 7:44 PM IST

டெஸ்ட் கிரிக்கெட் மட்டும்தான் ஆரம்பக்கட்டத்தில் ஆடப்பட்டுவந்தது. அதன்பின்னர் ஒரே நாளில் முடியக்கூடிய ஒருநாள் போட்டிகள் வந்தன. கிரிக்கெட் பல்வேறு பரிணாமங்களில் வளர்ச்சியடைந்துவரும் நிலையில், 3 மணி நேரத்தில் முடிவு தெரியக்கூடிய டி20 கிரிக்கெட் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

டி20 கிரிக்கெட் போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. டி20 கிரிக்கெட்டின் வருகைக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டின் மீதான ரசிகர்கள் ஆர்வம் குறைந்து டெஸ்ட் கிரிக்கெட் நலிவடைந்துவருகிறது என்பது 1970-80களில் ஆடிய கிரிக்கெட் வீரர்களின் கருத்து. அதனால் அவர்களில் பெரும்பாலானோர் டி20 கிரிக்கெட்டை ரசிப்பதில்லை.

ஆனால் அதே காலக்கட்டத்தில் ஆடிய கவாஸ்கரோ டி20 கிரிக்கெட்டை வெகுவாக ரசிக்கிறார். அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த கவாஸ்கர், என் காலத்தில் ஆடிய பல வீரர்களுக்கு டி20 ஃபார்மட் பிடிக்கவில்லை. ஆனால் எனக்கு பிடிக்கும். அதற்கு காரணம் மூன்றே மணி நேரத்தில் முடிந்துவிடும் என்பதுதான். மேலும் டி20 கிரிக்கெட்டில் வீரர்கள் ஸ்விட்ச் ஹிட், ரிவர்ஸ் ஸ்வீப் ஆகிய அபாரமான ஷாட்டுகளை ஆடுவதை பார்க்க சிறப்பாக உள்ளது.

டிவில்லியர்ஸ் 360 டிகிரியில் ஷாட்டுகளை அடிப்பார். மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை அடிப்பார்.  டிவில்லியர்ஸ் ஆடுவதை பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று கவாஸ்கர் தெரிவித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios