சூர்யகுமார் யாதவுக்கு மோசமான சூழலில் முக்கியமான அட்வைஸ் கொடுத்த கவாஸ்கர்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் ஹாட்ரிக் கோல்டன் டக் அவுட்டாகி விமர்சனங்களை எதிர்கொண்டுவரும் சூர்யகுமார் யாதவுக்கு சுனில் கவாஸ்கர் உருப்படியான ஆலோசனை வழங்கியுள்ளார்.
 

sunil gavaskar advice to suryakumar yadav after hat trick golden ducks in odi series against australia

இந்திய அணியின் அதிரடி வீரரும், டி20 கிரிக்கெட்டின் மிகப்பெரிய மேட்ச் வின்னருமான சூர்யகுமார் யாதவ், வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சமகாலத்தின் சிறந்த வீரராக பார்க்கப்படுகிறார். ஆனால் அவர் டி20 கிரிக்கெட்டில் ஜொலிக்கும் அளவிற்கு ஒருநாள் கிரிக்கெட்டில் ஜொலிக்கவில்லை.

டி20 கிரிக்கெட்டில் 48 போட்டிகளில் 3 சதங்களுடன் 1675 ரன்களை குவித்துள்ள சூர்யகுமார் யாதவ், ஒருநாள் கிரிக்கெட்டில் 23 போட்டிகளில் ஆடி வெறும் இரண்டே அரைசதங்களுடன் 433 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். 

அலட்சியமா முடிவெடுக்காதீங்க.. நாங்க உங்களோட ஆட விரும்புறோம்..! பிசிசிஐக்கு ஷாஹித் அஃப்ரிடி வேண்டுகோள்

ஒருநாள் போட்டிகளில் வழக்கமாக 4ம் வரிசையில் ஆடும் ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடாததால் இந்த தொடரில் 4ம் வரிசையில் இறங்க வாய்ப்பு பெற்றார் சூர்யகுமார் யாதவ். ஆனால் யாருமே எதிர்பார்த்திராத விதமாக 3 போட்டிகளிலும் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். ஹாட்ரிக் கோல்டன் டக் அவுட்டாகி விரும்பத்தகாத பட்டியலிலும் இணைந்தார்.

சூர்யகுமார் யாதவ் கோல்டன் டக் அவுட்டாகி கடும் விமர்சனங்களை சந்தித்துவரும் நிலையில், அவருக்கு கவாஸ்கர் உருப்படியான ஆலோசனை கூறியுள்ளார்.

நீங்க சீனியர்.. எனக்கு கீழ் பணிபுரிவது நல்லா இருக்காது! சீனியர் ஸ்பின்னரின் சேவையை ஏற்க மறுத்த ராகுல் டிராவிட்

இதுகுறித்து பேசிய சுனில் கவாஸ்கர், சூர்யகுமாருக்கு சொல்ல வேண்டிய அட்வைஸ் ஒன்றுமே இல்லை. இதுமாதிரியான மோசமான காலக்கட்டத்தை தலைசிறந்த வீரர்கள் அனைவருமே எதிர்கொண்டுள்ளனர் என்ற எதார்த்தத்தை உணர்ந்துகொண்ட, இந்த 3 போட்டிகளை கடந்து செல்ல வேண்டும். அவரது ஆட்டத்தில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். ஐபிஎல்லில் அவர் ஸ்கோர் செய்துவிட்டால் அவரது நம்பிக்கை மீண்டும் வளர்ந்துவிடும் என்று கவாஸ்கர் தெரிவித்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios