Asianet News TamilAsianet News Tamil

அப்போ யுவராஜ்.. இப்போ பும்ரா..! இந்திய வீரர்களால் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அசிங்கப்பட்ட ஸ்டூவர்ட் பிராட்

ஆல்டைம் சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவராக திகழும் அனுபவமிக்க ஃபாஸ்ட் பவுலரான இங்கிலாந்தின் நட்சத்திர பவுலர் ஸ்டூவர்ட் பிராட், அவரது கெரியரில் 2 மோசமான சாதனைகளுக்கு சொந்தக்காரராக்கியுள்ளனர் இந்திய வீரர்கள்.
 

stuart broad has the worst record of gave more runs in single over in test and t20 cricket
Author
Edgbaston, First Published Jul 2, 2022, 5:36 PM IST

இந்தியா - இங்கிலாந்து இடையேயான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, 98 ரன்களுக்கு ஷுப்மன் கில், புஜாரா, கோலி, விஹாரி, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் ரிஷப் பண்ட்டும் ஜடேஜாவும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி 6வது விக்கெட்டுக்கு 222 ரன்களை குவித்தனர். 

இதையும் படிங்க - ராகுல் டிராவிட்டா இப்படி? ரிஷப் பண்ட்டின் சதத்தை விட பரபரப்பா பேசப்படும் டிராவிட்டின் கொண்டாட்டம்!வைரல் வீடியோ

89 பந்தில் சதமடித்த ரிஷப் பண்ட் 111 பந்தில் 146 ரன்களை குவித்தார். அவரைத்தொடர்ந்து ஜடேஜாவும் சதமடித்தார். 104 ரன்களுக்கு ஜடேஜா ஆட்டமிழக்க, 375 ரன்களுக்கு இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்தது. ஆனால் அதன்பின்னரும், பும்ராவின் அதிரடியால் இந்திய அணிக்கு 41 ரன்கள் கிடைத்தது.

ஸ்டூவர்ட் பிராட் வீசிய இன்னிங்ஸின் 84வது ஓவரில் பும்ரா 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 29 ரன்களை விளாசினார். அதுபோக, 6 எக்ஸ்ட்ராஸும் கிடைத்தது. ஆக மொத்தம் அந்த ஓவரில் இந்திய அணிக்கு 35 ரன்கள் கிடைத்தது.

இதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் ஒரு பவுலர் வழங்கிய அதிகபட்ச ரன்கள் ஆகும். ஸ்டூவர்ட் பிராட் இந்த மோசமான சாதனையை படைக்க பும்ரா காரணமாகிவிட்டார். இதற்கு முன் 2007 டி20 உலக கோப்பையில், இந்தியா - இங்கிலாந்து இடையேயான போட்டியில் ஸ்டூவர்ட் பிராடின் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசி அந்த ஓவரில் 36 ரன்களை குவித்தார் யுவராஜ் சிங். டி20 கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் அதிக ரன்களை வழங்கிய பவுலர் என்ற மோசமான சாதனையை பிராட் படைக்க யுவராஜ் காரணமாக திகழ்ந்தார்.

இதையும் படிங்க - டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் அடித்த பும்ரா சாதனை..! லாராவின் சாதனையை தகர்த்து வரலாறு

டி20 கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் 36 ரன்களை வழங்கி  ஒரு ஓவரில் அதிக ரன்களை வழங்கிய பவுலர் என்ற மோசமான சாதனையை படைத்த பிராட், இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் 35 ரன்களை வாரி வழங்கி, டெஸ்ட்டிலும் ஒரு ஓவரில் அதிக ரன்களை வழங்கிய பவுலர் என்ற படுமோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் பிராட். இந்த 2 மோசமான சாதனையை அவர் படைக்க காரணம், யுவராஜ் மற்றும் பும்ரா ஆகிய 2 இந்திய வீரர்கள் ஆவர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios