இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் சீனியர், நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் ஸ்டூவர்ட் பிராட், 2 இன்னிங்ஸ்களிலும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் யாசிர் ஷாவின் விக்கெட்டைவீழ்த்திய ஸ்டூவர்ட் பிராட், யாசிர் ஷாவை நோக்கி ஆக்ரோஷமாக கத்தினார். பேட்ஸ்மேன்களே சொற்ப ரன்களில் அவுட்டாக, பவுலரான யாசிர் ஷா 24 ரன்கள் அடித்தார். அதனால் கடுப்பான பிராட், யாசிர் ஷாவை அவுட்டாக்கியதும் அவரை நோக்கி கோபத்தை வெளிப்படுத்தினார். 

ஐசிசி நடத்தை விதிப்படி அது குற்றம் என்பதால், அவருக்கு போட்டி ஊதியத்தில் 15 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு டீமெரிட் புள்ளியும் வழங்கப்பட்டது. கடந்த 24 மாதத்தில் 3 டீமெரிட் புள்ளிகளை பெற்றுள்ள பிராட் இன்னும் ஒரு டீமெரிட் புள்ளி பெற்றால், ஒரு டெஸ்ட் போட்டியில் ஆட தடைவிதிக்கப்படும். எனவே அடுத்த போட்டியில் ஸ்டூவர்ட் பிராட் சேட்டை எதுவும் செய்யாமல் அடக்கிக்கொண்டு இருக்க வேண்டும்.