Asianet News TamilAsianet News Tamil

கோப்பை அவங்களுக்குத்தான்.. அடித்து சொல்லும் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக்

ஆஸ்திரேலிய அணிக்கு 1999ல் உலக கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் ஸ்டீவ் வாக்கும் உலக கோப்பை குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

steve waugh picks england as his favourite to win world cup 2019
Author
Australia, First Published May 21, 2019, 9:54 AM IST

உலக கோப்பை வரும் 30ம் தேதி தொடங்குகிறது. உலக கோப்பையில் ஆடும் அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு தீவிரமாக தயாராகிவருகின்றன. இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய 2 அணிகளில் ஒன்றுதான் இந்த உலக கோப்பையை வெல்லும் என்று பல முன்னாள் வீரர்கள் ஆருடம் தெரிவித்துள்ளனர். 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக ஆடிவருகிறது. இந்திய அணியில் முன்னெப்போதையும் விட ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் வலுவாக உள்ளது. பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷமி ஆகியோர் எதிரணிகளை தெறிக்கவிடுகின்றனர். குல்தீப் - சாஹல் ஜோடி ஸ்பின்னில் மிரட்டுகிறது. இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங்கும் வலுவாக உள்ளது.

steve waugh picks england as his favourite to win world cup 2019

இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி கடந்த சில ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகளில் ஆக்ரோஷமாக ஆடிவருகிறது. இயன் மோர்கன், ஜேசன் ராய், பட்லர், பேர்ஸ்டோ, ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் என அந்த அணி நல்ல பலம் வாய்ந்த சிறப்பான அணியாக இருப்பதுடன் உலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பது, அந்த அணிக்கு கூடுதல் பலம். அதனால் உலக கோப்பையை இங்கிலாந்து வெல்வதற்கான வாய்ப்புகள் தான் பிரகாசமாக இருப்பதாக பல முன்னாள் ஜாம்பவான்கள் பார்க்கின்றனர்.

steve waugh picks england as his favourite to win world cup 2019

ஸ்மித் மற்றும் வார்னர் அணிக்கு திரும்பியிருப்பதால் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியும் கோப்பையை மீண்டும் வெல்லும் முனைப்பில் உள்ளது. அந்த அணி பேட்டிங், பவுலிங் என சமபலம் வாய்ந்த அணியாக உள்ளது. 

பாகிஸ்தான் அணி, இங்கிலாந்தில் 2009ல் நடந்த டி20 உலக கோப்பை மற்றும் 2017ம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி ஆகிய சர்வதேச கோப்பைகளை வென்றுள்ளது. எனவே பாகிஸ்தான் அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. 

தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகளும் வலுவாக உள்ளன. இவ்வாறு ஒவ்வொரு அணியுமே சிறந்த அணியாக திகழும் நிலையில், உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகள் குறித்து பல முன்னாள் ஜாம்பவான்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

steve waugh picks england as his favourite to win world cup 2019

அந்தவரிசையில், ஆஸ்திரேலிய அணிக்கு 1999ல் உலக கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் ஸ்டீவ் வாக்கும் உலக கோப்பை குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய ஸ்டீவ் வாக், என்னுடைய சாய்ஸ் இங்கிலாந்து தான். கடந்த இரண்டு ஆண்டுகளாக இங்கிலாந்து அணி அபாரமாக ஆடிவருகிறது. 

சொந்த மண்ணில் ஆடுவது அந்த அணிக்கு கூடுதல் பலம். அதேநேரத்தில் அது கூடுதல் நெருக்கடியாகவும் இருக்கும். ஆனால் அதை சமாளிக்க தேவையான மன வலிமையை வீரர்களுக்கு கொடுக்கும் வகையிலான சிறந்த பயிற்சியாளரை(டிரெவெர் பேலிஸ்) இங்கிலாந்து அணி பெற்றுள்ளது.எனவெ இங்கிலாந்து தான் வெல்லும். இங்கிலாந்துக்கு அடுத்த சாய்ஸ் என்றால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவை சொல்வேன் என்று ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios