விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, 2018-19 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் முதன்முறையாக ஆஸ்திரேலியாவை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது. ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை 2-1 என வென்று வரலாற்று சாதனை படைத்தது இந்திய அணி. 

ஆனால் இந்திய அணி வீழ்த்திய அந்த ஆஸ்திரேலிய அணி, வலுவானது இல்லை. பெஸ்ட் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி வீழ்த்தவில்லை. ஏனெனில் இந்திய அணி வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் மற்றும் வார்னர் என்ற இருபெரும் ஜாம்பவான்களும் இல்லை. ஸ்மித்தும் வார்னரும் இல்லாத ஆஸ்திரேலிய அணியைத்தான் இந்திய அணி வீழ்த்தியது. எதுவாக இருந்தாலும் வெற்றி வெற்றிதான். ஆனாலும் இந்திய அணி வீழ்த்தியது சிறந்த ஆஸ்திரேலிய அணி கிடையாது என்பதுதான் பொதுவான கருத்து. ஸ்மித்தும் வார்னரும் தடையில் இருந்ததால் அவர்கள் ஆடவில்லை. அவர்கள் இருவரும் இல்லாத ஆஸ்திரேலிய அணியைத்தான் இந்திய அணி வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது. 

இந்நிலையில், இந்திய அணி இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவிற்கு சென்று 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. இது ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான தொடர் என்பதால் இரு அணிகளுமே வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் ஆடும். கடந்த முறை அடிபட்ட ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி முனைப்பு மட்டுமல்லாமது, அடிபட்ட வடுவும் இருப்பதால், அந்த அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயலும்.

ஸ்மித் மற்றும் வார்னர் அணிக்கு திரும்பியிருப்பதுடன், மார்னஸ் லபுஷேன் என்ற தலைசிறந்த பேட்ஸ்மேனும் ஆஸ்திரேலிய அணியில் இருக்கிறார். எனவே இந்திய அணிக்கு அடுத்த சுற்றுப்பயணம் கடும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

இந்நிலையில், இந்திய அணியின் அடுத்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக், இந்த முறை ஆஸ்திரேலிய அணி தான் டெஸ்ட் தொடரை வெல்லும் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில், ஆடுகளங்களை பற்றி நன்கு தெரியும். அதுமட்டுமல்லாமல் பகலிரவு டெஸ்ட் போட்டி என்பது இந்திய அணிக்கு புதிதானது. ஆனால் விராட் கோலி சவால்களை எதிர்கொள்ளும் விதத்தை நான் மிகவும் ரசிக்கிறேன். உலகின் சிறந்த அணியாக திகழ வேண்டுமானால் வெளிநாடுகளில் வெற்றிகளை பெற வேண்டும்.

Also Read - இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போவது இந்த நால்வரில் இருவர் தான்.. அவர்கள் யார்..?

இந்திய அணி கடந்த முறை பெற்ற வெற்றியை திரும்பப்பெற முடியாது. ஆனால் அந்த நேரத்தில் ஆஸ்திரேலிய அணியில் சிறந்த பேட்ஸ்மேன்கள் கிடையாது. இப்போது லபுஷேன் அபாரமாக ஆடிக்கொண்டிருக்கிறார். ஸ்மித் - வார்னருடன் கூடுதலாக லபுஷேனும் இருக்கிறார். பவுலிங் யூனிட்டும் சிறப்பாகவுள்ளது. இதெல்லாம் ஆஸ்திரேலிய அணியின் பலங்கள். ஆனால் இந்திய அணியில் பலவீனம் என்று பெரிதாக எதுவுமே இல்லை. எனவே சமபலம் வாய்ந்த இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதும் அந்த டெஸ்ட் தொடர் கடும் சவாலாக இருக்கும் என்று ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார்.