பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடை முடிந்து வந்த பின்னர், ஸ்மித்தின் பேட்டிங் வேற லெவலில் உள்ளது. ஆஷஸ் தொடரில் அபாரமாக ஆடி 773 ரன்களை குவித்து, அந்த தொடரில் பல்வேறு சாதனைகளை படைத்தார். ஆஷஸ் தொடரில் அபாரமாக ஆடிய ஸ்மித், பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் சரியாக ஆடவில்லை. 

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 4 ரன்களும் இரண்டாவது போட்டியில் 36 ரன்களும் என மொத்தமாகவே 40 ரன்கள் மட்டுமே அடித்தார். ஸ்மித் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமனாதிலிருந்து அரைசதம் அடிக்காத பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடர் இதுதான். இதுவரை பாகிஸ்தானுக்கு எதிராக ஆடிய அனைத்து டெஸ்ட் தொடர்களிலும் ஸ்மித் அரைசதம் அடித்துள்ளார். 

இந்த தொடரில் பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகளிலும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து தொடரை இழந்திருந்தாலும், ஸ்மித்தின் சாதனை பயணத்துக்கு முடிவுரை எழுதியது அந்த அணிக்கு ஒரு திருப்தியாக இருக்கும்.