இவர்களில் விராட் கோலியும் ஸ்டீவ் ஸ்மித்தும் தான் டாப் 2 பேட்ஸ்மேன்களாக உள்ளனர். இருவரும் சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளை முறியடித்து புதிய மைல்கற்களை எட்டிவருகின்றனர். 

வில்லியம்சன் மற்றும் ரூட் ஆகியோர்களும் சளைத்தவர்கள் அல்ல. இவர்களும் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்கள். இவர்கள் நால்வரும் சார்ந்த அணிகள், பரஸ்பரம் மோதிக்கொள்ளும்போது, இவர்களுக்கு இடையேயான போட்டி கடுமையாக இருக்கும்.

அந்தவகையில், ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ளது. எனவே ஸ்மித் மற்றும் வில்லியம்சன் மீதே அனைவரின் பார்வையும் உள்ளது. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி பெர்த்திலும் இரண்டாவது போட்டி மெல்போர்னில் பகலிரவு போட்டியாகவும் மூன்றாவது போட்டி சிட்னியிலும் நடக்கவுள்ளது. 

இந்நிலையில், வில்லியம்சன் குறித்து பேசியுள்ள ஸ்மித், அவரை பயங்கரமாக புகழ்ந்துள்ளார். ஃபாஸ்ட் பவுலிங்கை அபாரமாக ஆடுகிறார் வில்லியம்சன். நானும் வில்லியம்சனும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் பேட்டை பிடிக்கிறோம். பேட்டின் கைப்பிடியில் பேட்டை ஒட்டியவாறு பிடித்து ஆடுகிறோம். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அப்படி ஆடுவதைத்தான் நான் விரும்புவேன். பந்தை நன்றாக விட்டு அடிக்க அது உதவும். வில்லியம்சன் தான் உலகிலேயே பந்தை நன்றாக வரவிட்டு அடிக்கும் வீரர். அவரது பொறுமை மிகவும் அபாரமானது. அவர் பந்தை நன்றாக விட்டு ஆடுவதால், வேகமான பந்துகளைக்கூட ஆடுவதற்கு நல்ல டைம் கிடைக்கிறது என்று ஸ்மித் தெரிவித்தார். 

ஸ்மித் மற்றும் வில்லியம்சனின் பேட்டிங் ஸ்டைல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே மாதிரியாக இருப்பதாக பாண்டிங் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.