சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரும், டெஸ்ட் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரருமான ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், இந்தியாவுக்கு எதிராக நடந்துவரும் டெஸ்ட் தொடரில், வழக்கத்திற்கு மாறாக ஸ்மித் படுமோசமாக ஆடிவருகிறார்.

இதுவரை ஆடிய 2 டெஸ்ட் போட்டிகளில் 4 இன்னிங்ஸ்களிலும் சேர்த்தே வெறும் 10 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். ஒருமுறை நாட் அவுட். மற்ற 3 இன்னிங்ஸ்களில் 2 முறை அஷ்வினின் சுழலில் வீழ்ந்தார் ஸ்மித். ஸ்மித் களத்திற்கு வந்ததுமே அவரை நிலைக்கவிடாமல், உடனடியாக 2 முறையும் அவுட்டாக்கி அனுப்பினார் அஷ்வின்.

ஸ்மித்தை பெரிய இன்னிங்ஸ் ஆடவிடாமல், விரைவில் வீழ்த்தியதால் தான் இந்திய அணியால் 2வது டெஸ்ட்டில் வெற்றி பெற முடிந்தது. இந்நிலையில், அஷ்வினிடம் சரணடைந்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்மித், அஷ்வினுக்கு எதிராக நான் சரியாக ஆடவில்லை. என் கெரியரில் எந்த ஸ்பின்னரையும் என் மீது ஆதிக்கம் செலுத்தி, அவர்களை என்னை ஆட்டுவிக்க அனுமதித்ததில்லை. ஆனால் அஷ்வினை அதை செய்ய விட்டுவிட்டேன் என்று ஸ்மித் தெரிவித்தார்.