Asianet News TamilAsianet News Tamil

கூட்டம் போட்டு திட்டம் தீட்டுவதை விரும்பாத தோனி..! தல ரூட்டே தனி

தோனி முன்கூட்டியே கடுமையாக திட்டமிடுபவர் அல்ல; அவர் உள்ளுணர்வை பின்பற்றும் கேப்டன் என்று சிஎஸ்கே அணி உரிமையாளர் ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார். 
 

srinivasan speaks about csk captain dhoni instinct captaincy style
Author
Chennai, First Published Aug 3, 2020, 8:10 PM IST

ஐபிஎல்லின் வெற்றிகரமான அணி சிஎஸ்கே. மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறையும் அதற்கடுத்து அதிகபட்சமாக சிஎஸ்கே 3 முறையும் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளன. சிஎஸ்கே அணி இதுவரை ஆடிய 10 ஐபிஎல் சீசன்களில் 8 முறை இறுதி போட்டி வரை சென்று, அதில் 3 முறை கோப்பையை வென்றது. 5 முறை இறுதி போட்டியில் தோற்று கோப்பையை இழந்தது. ஆடிய அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்ற ஒரே அணி சிஎஸ்கே மட்டுமே. 

சிஎஸ்கே அணியின் ஆதிக்கத்துக்கும் வெற்றிகரமான அணியாக கெத்தாக நடைபோடுவதற்கும் தோனியின் கேப்டன்சி முக்கியமான காரணம். சிஎஸ்கே அணியின் வீரர்களை தேர்வு செய்வது தொடங்கி, அணி சார்ந்த அனைத்து விஷயங்களிலும் தோனி நினைத்ததை செய்யுமளவிற்கு அவருக்கு முழு சுதந்திரம் இருக்கிறது. எனவே தான் நினைப்பதை தோனியால் சுதந்திரமாக செயல்படுத்த முடியும். இது ஒரு கேப்டனாக அவருக்கு மிகப்பெரிய பலம். 

srinivasan speaks about csk captain dhoni instinct captaincy style

தோனியும் தன் மீது அணி நிர்வாகம் வைத்திருக்கும் நம்பிக்கையை சிதைக்காத வகையில், சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறார். மிகவும் கூலான, நிதானமான கேப்டனான தோனி, உள்ளுணர்வின்படி செயல்படும் கேப்டன் என்பது அனைவரும் அறிந்ததே. அதை இந்திய அணியின் கேப்டனாகவும் சிஎஸ்கேவின் கேப்டனாகவும், பலமுறை பார்த்திருக்கிறோம். 

அந்தவகையில், தோனி உள்ளுணர்வின்படி செயல்படும் கேப்டன் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான் என்றாலும், அதை அவரை பக்கத்தில் இருந்து பார்த்தவரும் சிஎஸ்கே அணியின் உரிமையாளரும் முன்னாள் பிசிசிஐ தலைவருமான ஸ்ரீநிவாசனும் கூறியுள்ளார். 

srinivasan speaks about csk captain dhoni instinct captaincy style

இதுகுறித்து கருத்து தெரிவித்த ஸ்ரீநிவாசன், தரவுகளை வைத்துக்கொண்டு பவுலிங் பயிற்சியாளர்கள் அமர்ந்துகொண்டு, எதிரணி வீரர்கள் டி20 போட்டிகளில் ஆடிய வீடியோக்களை பார்த்து, ஒவ்வொரு வீரரின் பலம், பலவீனம் ஆகியவற்றை எல்லாம் ஆராய்ந்து திட்டம் தீட்டுவார்கள். அந்த கூட்டத்தில் தலைமை பயிற்சியாளர், பயிற்சியாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு கருத்து தெரிவிப்பார்கள். ஆனால் தோனி அந்த கூட்டத்தில் கலந்துகொள்ளமாட்டார். தோனி உள்ளுணர்வின்படி செயல்படும் கேப்டன். களத்தில் ஒரு குறிப்பிட்ட வீரரின் செயல்பாட்டை பார்த்துவிட்டு அதற்கேற்ப களத்திலேயே திட்டம் வகுப்பவர் தோனி என்று ஸ்ரீநிவாசன் தெரிவித்தார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios