Asianet News TamilAsianet News Tamil

அவசரத்தில் ரூல்ஸை மறந்து காமெடி பண்ண இலங்கை வீரர்.. தப்பிச்சோம்டா சாமினு சிரிப்பாய் சிரித்த ஸ்மித்.. வீடியோ

ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை வீரர் சந்தகன், அவசரத்தில் விதிமுறையை மறந்து தவறாக செயல்பட்டதால் ஸ்மித்தின் விக்கெட்டை வீழ்த்தும் வாய்ப்பை இழந்தனர். 

sri lankan bowler sandakan forget rule and missed to take smith wicket
Author
Brisbane QLD, First Published Oct 31, 2019, 10:25 AM IST

இலங்கை அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. அடிலெய்டில் நடந்த முதல் போட்டியில் 134 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, பிரிஸ்பேனில் நேற்று நடந்த இரண்டாவது போட்டியிலும் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி, 19 ஓவரில் 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 118 ரன்கள் என்ற இலக்கை, ஒரேயொரு விக்கெட்டை மட்டுமே இழந்த நிலையில், வார்னரும் ஸ்மித்தும் இணைந்தே எட்டிவிட்டனர். இருவருமே அரைசதம் அடித்து 13வது ஓவரிலேயே இலக்கை எட்டியதால் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி. 

sri lankan bowler sandakan forget rule and missed to take smith wicket

ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கின்போது ஸ்மித்தை  ரன் அவுட் செய்ய கிடைத்த வாய்ப்பை, அவசரத்தில் விதியை மறந்து இலங்கை வீரர் சந்தகன் தவறாக செயல்பட்டதால் ஸ்மித் தப்பினார். சந்தகன் வீசிய பந்தை வார்னர் ஸ்டிரைட்டாக அடித்தார். பந்து நேராக சென்று பவுலிங் முனையில் இருந்த ஸ்டம்பை அடித்தது. அந்த பந்தை வீசும்போதே ஸ்மித் ரன் ஓடுவதற்கு தயாராக கிரீஸை விட்டு வெளியேறியதால், வார்னர் அடித்த பந்து, பவுலிங் முனையில் இருந்த ஸ்டம்பை அடிக்கும்போது கிட்டத்தட்ட பாதி பிட்ச்சிற்கு சென்றுவிட்டார். ஆனால் அந்த பந்து பவுலரின் கையில் பட்டு ஸ்டம்பில் படாததால் அது அவுட் இல்லை. 

ஆனாலும் ஸ்மித் பாதி பிட்ச்சில் நின்றதால், அவரை ரன் அவுட் செய்வதற்காக, ஸ்டம்பில் அடித்துவிட்டு கீழே கிடந்த பந்தை கையில் எடுத்தார் சந்தகன். வார்னர் அடித்த பந்து ஸ்டம்பில் பட்டதால், ஸ்டம்பில் இருந்த இரண்டு பெயில்களும் கீழே விழுந்தன. எனவே ஸ்மித்தை ரன் அவுட் செய்ய வேண்டுமென்றால், பந்தை கையில் எடுத்து அதே கையில் ஸ்டம்பை பிடுங்க வேண்டும். ஆனால் சந்தகன், அவசரத்தில் பந்தை வலது கையில் எடுத்துக்கொண்டு, ஸ்டம்பை இடது கையில் பிடுங்கினார். அது விதிப்படி தவறு. அதற்குள்ளாக ஸ்மித் கிரீஸுக்குள் வந்துவிட்டார். சந்தகன் உடனடியாக தனது தவறை உணர்ந்து அதிருப்தியடைந்தார். சந்தகனின் செயலைக்கண்டு ஸ்மித் உடனடியாக அவரது தவறை உணர்த்தி, நாம் தப்பிவிட்டோம் என்ற ரீதியில் ரியாக்‌ஷன் கொடுத்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios