இலங்கை அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. அடிலெய்டில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

பிரிஸ்பேனில் இன்று இரண்டாவது போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் மிட்செல் ஸ்டார்க் ஆடவில்லை. அவரது சகோதரரின் திருமணத்திற்கு சென்றுவிட்டதால் அவருக்கு பதிலாக பில்லி ஸ்டேன்லேக் அணியில் இணைந்துள்ளார். 

ஆஸ்திரேலிய அணி:

ஃபின்ச்(கேப்டன்), வார்னர், ஸ்மித், மேக்ஸ்வெல், அஷ்டன் டர்னர், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), அஷ்டன் அகார், பாட் கம்மின்ஸ், கேன் ரிச்சர்ட்ஸன், ஆடம் ஸாம்பா, பில்லி ஸ்டேன்லேக். 

இலங்கை அணி:

குணதிலகா, குசால் மெண்டிஸ், பானுகா ராஜபக்சா, குசால் பெரேரா(விக்கெட் கீப்பர்), நிரோஷன் டிக்வெல்லா, தசுன் ஷனாகா, ஹசரங்கா, லக்‌ஷன் சந்தாகான், லசித் மலிங்கா(கேப்டன்), நுவான் பிரதீப், ஐசுரு உடானா.