உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. 

உலக கோப்பையில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் ஆகிய இரண்டுமே இதுவரை தலா 5 போட்டிகளில் ஆடியுள்ளன. இங்கிலாந்து அணி 4 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் மூன்றாமிடத்தில் உள்ளது. இலங்கை அணி ஒரேயொரு வெற்றியுடன் 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் ஆறாம் இடத்தில் உள்ளது. 

இரண்டாவது வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் வலுவான இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளும் இலங்கை அணியில், ஒரேயொரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இலங்கை அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் திரிமன்னே நீக்கப்பட்டு ஃபெர்னாண்டோ அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் கருணரத்னே பேட்டிங் தேர்வு செய்ததை அடுத்து இலங்கை அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

இங்கிலாந்து அணி:

வின்ஸ், பேர்ஸ்டோ, ஜோ ரூட், இயன் மோர்கன்(கேப்டன்), ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷீத், ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் உட். 

இலங்கை அணி:

கருணரத்னே(கேப்டன்), குசால் பெரேரா, ஃபெர்னாண்டோ, குசால் மெண்டிஸ், மேத்யூஸ், திசாரா பெரேரா, ஜீவன் மெண்டிஸ், தனஞ்செயா டி சில்வா, உடானா, மலிங்கா, பிரதீப்.