ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், இலங்கை அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின.

சூப்பர் 4 சுற்றில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணியும், இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அணியும் வெற்றி பெற்றிருந்த நிலையில், இன்றைய ஆட்டத்தில் இந்தியாவும் இலங்கையும் மோதுகின்றன.

பாகிஸ்தானிடம் தோற்ற இந்திய அணி, ஃபைனலுக்கு முன்னேற வேண்டுமெனில், இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய 2 அணிகளையுமே வீழ்த்தி வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இன்று இலங்கையை எதிர்கொண்டு ஆடுகிறது இந்திய அணி.

இதையும் படிங்க - பக்கா பிளானுடன் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற்ற சுரேஷ் ரெய்னா..! அந்நிய மண்ணில் அதகளம் செய்யப்போகும் சின்ன தல

துபாயில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனாகா ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இலங்கை அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இளம் ஸ்பின்னர் ரவி பிஷ்னோய் நீக்கப்பட்டு சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் சேர்க்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 சுற்று போட்டியில் ரவி பிஷ்னோய் சிறப்பாக பந்துவீசினார். ஆனால் அனுபவ ஸ்பின்னர் தேவை என்ற வகையில், அஷ்வின் சேர்க்கப்பட்டுள்ளார். அஷ்வின் சேர்க்கை அணிக்கு வலுசேர்க்கும் என்பதால் அஷ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்.

இதையும் படிங்க - யாருப்பா உனக்கு மெசேஜ் பண்ணலைனு சொல்ற.. அவங்ககிட்ட நேரடியா கேட்க வேண்டியதுதானே? கோலியை விளாசிய கவாஸ்கர்

இலங்கை அணி:

பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ்(விக்கெட் கீப்பர்), சாரித் அசலங்கா, தனுஷ்கா குணதிலகா, பானுகா ராஜபக்சா, தசுன் ஷனாகா (கேப்டன்), வனிந்து ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, மஹீஷ் தீக்‌ஷனா, அசிதா ஃபெர்னாண்டோ, தில்ஷான் மதுஷங்கா.