ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பி பிரிவில் ஆஃப்கானிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
சூப்பர் 4 சுற்றில் இன்று நடக்கும் முதல் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் - இலங்கை அணிகள் மோதுகின்றன. ஷார்ஜாவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனாகா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
இதையும் படிங்க - நீ நாட் அவுட்டா போவதால் டீமுக்கு என்ன யூஸ்.? அரைசதம் அடித்தும் வாசிம் அக்ரமிடம் திட்டு வாங்கிய முகமது ரிஸ்வான்
லீக் சுற்றில் ஆஃப்கானிஸ்தானிடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இலங்கை அணி களமிறங்கியுள்ளது. லீக் சுற்றில் அபாரமாக விளையாடி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஆஃப்கானிஸ்தான் அணி, வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பில் களமிறங்கியிருக்கிறது.
இந்த போட்டிக்கான டாஸ் இலங்கைக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. இலங்கை அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் இலங்கை அணி களமிறங்கியுள்ளது.
இலங்கை அணி:
பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), சாரித் அசலங்கா, தனுஷ்கா குணதிலகா, பானுகா ராஜபக்சா, தசுன் ஷனாகா (கேப்டன்), வனிந்து ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, மஹீஷ் தீக்ஷனா, அசிதா ஃபெர்னாண்டோ, தில்ஷான் மதுஷங்கா.
இதையும் படிங்க - AUS vs ZIM 3வது ODI: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த ஜிம்பாப்வே
ஆஃப்கானிஸ்தான் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அஸ்மதுல்லா உடல்நிலை சரியில்லாததால் இந்த போட்டியில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக சமியுல்லா ஷின்வாரி சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆஃப்கானிஸ்தான் அணி:
ஹஸ்ரதுல்லா சேஸாய், ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் ஜட்ரான், நஜிபுல்லா ஜட்ரான், கரிம் ஜனத், முகமது நபி (கேப்டன்), ரஷீத் கான், ஷமியுல்லா ஷின்வாரி, நவீன் உல் ஹக், முஜீபுர் ரஹ்மா, ஃபஸல்ஹக் ஃபரூக்கி.
