ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் ஆடிவருகிறது. 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலிய அணி 2-1 என வென்றது. அதைத்தொடர்ந்து ஒருநாள் தொடர் நடக்கிறது.
5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று நடக்கிறது. ஒருநாள் தொடரிலும் வெற்றி பெறும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணியும், டி20 தொடரை இழந்ததால் ஒருநாள் தொடரை வெல்லும் முனைப்பில் இலங்கை அணியும் களமிறங்குகின்றன.
பகலிரவு போட்டியாக நடக்கும் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனாகா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவன் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
ஆஸ்திரேலிய அணி:
டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷேன், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), அஷ்டான் அகர், பாட் கம்மின்ஸ், ஜெய் ரிச்சர்ட்ஸன், ஜோஷ் ஹேசில்வுட்.
இலங்கை அணி:
பதும் நிசாங்கா, தனுஷ்கா குணதிலகா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), சாரித் அசலங்கா, தனஞ்செயா டி சில்வா, தசுன் ஷனாகா (கேப்டன்), வனிந்து ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, துஷ்மந்தா சமீரா, துனித் வெல்லாலகே, மஹீஷ் தீக்ஷனா.
