இந்தியாவிற்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. வரும் 24ம் தேதி முதல் டி20 போட்டி லக்னோவிலும், 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் அடுத்த 2 போட்டிகள் தர்மசாலாவிலும் நடக்கின்றன.
இந்த டி20 தொடருக்கான, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய டி20 அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.
இந்திய டி20 அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரித் பும்ரா (துணை கேப்டன்), புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், ஆவேஷ் கான்.
இந்நிலையில், இந்த டி20 தொடருக்கான இலங்கை அணி இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து நேரடியாக இந்தியாவிற்கு வந்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 4-0 என இழந்த இலங்கை அணி, இந்தியாவிற்கு எதிரான டி20 தொடரில் வெற்றி பெறும் முனைப்பில் இந்தியாவிற்கு வந்துள்ளது.
தசுன் ஷனாகா தலைமையிலான இலங்கை அணியில் நல்ல ஃபார்மில் உள்ள அதிரடி தொடக்க வீரர்களான பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ் ஆகிய இருவரும் உள்ளனர். சாரித் அசலங்கா துணை கேப்டன். தனுஷ்கா குணதிலகா, தினேஷ் சண்டிமால் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
ஸ்பின் ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்கா அணியில் உள்ளார். ஸ்பின்னிற்கு சாதகமான இந்திய ஆடுகளங்களில் ஹசரங்கா தாக்கத்தை ஏற்படுத்துவார் என நம்பலாம். துஷ்மந்தா சமீரா, லஹிரு குமாரா, பினுரா ஃபெர்னாண்டோ, மஹீஷ் தீக்ஷனா ஆகியோரும் இலங்கை அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இலங்கை டி20 அணி:
தசுன் ஷனாகா (கேப்டன்), பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ், சாரித் அசலங்கா (துணை கேப்டன்), தினேஷ் சண்டிமால், தனுஷ்கா குணதிலகா, காமில் மிஷரா, ஜனித் லியானகே, வனிந்து ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, துஷ்மந்தா சமீரா, லஹிரு குமாரா, பினுரா ஃபெர்னாண்டோ, ஷிரான் ஃபெர்னாண்டோ, மஹீஷ் தீக்ஷனா, ஜெஃப்ரே வாண்டெர்சே, பிரவீன் ஜெயவிக்ரமா, ஏஷியன் டேனியல்.
