ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி பிரிஸ்பேனில் நடந்துவருகிறது.  

டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. குணதிலகாவும் குசால் மெண்டிஸும் தொடக்க வீரர்களாக இறங்கினார். கேன் ரிச்சர்ட்ஸன் முதல் ஓவரை வீசினார். முதல் ஓவரின் கடைசி பந்திலேயே குசால் மெண்டிஸ் அவுட்டாகியிருக்க வேண்டியவர். 

ரிச்சர்ட்ஸன் ஆஃப் திசையில் வீசிய பந்தை பாயிண்ட் திசையில் அடித்தார் மெண்டிஸ். அதை பாயிண்ட் திசையில் ஃபீல்டிங் செய்த ஸ்மித், டைவ் அடித்து கிட்டத்தட்ட பிடித்துவிட்டார். ஆனால் கையில் சிக்கிய பந்து நன்றாக அகப்படவில்லை. அதனால் குசால் மெண்டிஸ் தப்பினார். அந்த வீடியோ..

Scroll to load tweet…

அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள தவறிவிட்டார் மெண்டிஸ். முதல் ஓவரில் தப்பிய மெண்டிஸ், இரண்டாவது ஓவரிலேயே ரன் அவுட்டாகி வெளியேறினார். இரண்டாவது ஓவரின் நான்காவது பந்தை அடித்த குணதிலகா, ரன் ஓடுவதற்கு இரண்டு ஸ்டெப் முன்னெடுத்தார். அவரை நம்பி மெண்டிஸும் ஓடினார். ஆனால் ஃபீல்டர் பந்தை நெருங்கியதும், பின்வாங்கினார் குணதிலகா. ஆனால் மெண்டிஸ் பாதி பிட்ச்சை கடந்துவிட்டார். பந்தை பிடித்த அஷ்டன் டர்னர், பவுலிங் முனையில் இருந்த ஸ்டம்பை நோக்கி பந்தை எறிய, பந்து ஸ்டம்பில் படவில்லை. ஆனால் மிட் ஆனில் நின்ற அஷ்டன் அகார் அந்த பந்தை பிடித்து ஸ்டம்பில் அடித்து மெண்டிஸை ரன் அவுட் செய்துவிட்டார். அந்த வீடியோ இதோ.. 

Scroll to load tweet…

மெண்டிஸ் ஒரு ரன்னில் அவுட்டாக, நன்றாக ஆடிக்கொண்டிருந்த குணதிலகாவும் 21 ரன்னில் ஸ்டேன்லேக்கின் பந்தில் போல்டானார். அதன்பின்னர் அவிஷ்கா ஃபெர்னாண்டோவும் 17 ரன்னில் ஆட்டமிழக்க, 53 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இலங்கை அணி.