Asianet News TamilAsianet News Tamil

Asia Cup:சூப்பர்4 சுற்றின் முதல் போட்டியில் இலங்கை-ஆஃப்கானிஸ்தான் பலப்பரீட்சை! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

ஆசிய கோப்பை சூப்பர்  4 சுற்றின் முதல் போட்டியில் இன்று இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

sri lanka and afghanistan teams probable playing eleven for the first super 4 match in asia cup 2022
Author
First Published Sep 3, 2022, 2:07 PM IST

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பி பிரிவில் ஆஃப்கானிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

சூப்பர் 4 சுற்று இன்று முதல் தொடங்குகிறது. இன்று நடக்கும்  சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் - இலங்கை அணிகள் மோதுகின்றன. ஷார்ஜாவில் இன்று இரவு இந்திய நேரப்படி 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பைக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு..! தூக்கி எறியப்பட்ட பேர்ஸ்டோ, ராய்

லீக் சுற்றில் ஆஃப்கானிஸ்தானிடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இலங்கை அணி களமிறங்குகிறது. லீக் சுற்றில் அபாரமாக விளையாடி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஆஃப்கானிஸ்தான் அணி, வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பில் களம் காண்கிறது.

இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

உத்தேச இலங்கை அணி:

பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), சாரித் அசலங்கா, தனுஷ்கா குணதிலகா, பானுகா ராஜபக்சா, தசுன் ஷனாகா (கேப்டன்), வனிந்து ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, மஹீஷ் தீக்‌ஷனா, அசிதா ஃபெர்னாண்டோ, தில்ஷான் மதுஷங்கா.

இதையும் படிங்க - சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக டுப்ளெசிஸ் நியமனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! ஹெட்கோச் ஸ்டீஃபன் ஃப்ளெமிங்

உத்தேச ஆஃப்கானிஸ்தான் அணி:

ஹஸ்ரதுல்லா சேஸாய், ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் ஜட்ரான், நஜிபுல்லா ஜட்ரான், கரிம் ஜனத், முகமது நபி (கேப்டன்), ரஷீத் கான், அஸ்மதுல்லா ஓமர்ஸாய், நவீன் உல் ஹக், முஜீபுர் ரஹ்மா, ஃபஸல்ஹக் ஃபரூக்கி.
 

Follow Us:
Download App:
  • android
  • ios